காரைக்குடியில் கலைஞரின் 103-வது பிறந்த நாள்: திமுகவினர் நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாட்டம்…


காரைக்குடியில் ஜீன்-03-ல் செம்மொழி நாயகர் முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் 103-வது பிறந்த நாள் காரைக்குடி மாநகரம் மற்றும் 15வது வார்டு சார்பில் முன்னாள் அமைச்சர் இலக்கியச் சூரியன் நற்றமிழ் நாவலர் மு.தென்னவன் மாநகரச் செயலாளர் மாநகர மேயர் பொறுப்பு நா.குணசேகரன் மற்றும் மாநகர கழக நிர்வாகிகள் மாமன்ற உறுப்பினர்கள் சார்பு அணியின் அமைப் பாளர்கள் துணை அமைப் பாளர்கள் வட்டக் கழக செயலாளர்கள் பிரதிநிதிகள் ஆகியோர் கள் முன்னிலையில் அலங்கரிக்கப் பட்ட திருவுருவப் படத்திற்கு மலர்தூவி புகழ் வணக்கம் செலுத்தப் பட்டது.

இந்த நிகழ்வில் தாய் கழகமான தி.க.மாவட்டக் காப்பாளர் சாமி திராவிட மணி மாநில கழகச் சொற்பொழி வாளர் என்னரசு பிராட்லா ஆகியோர் கள் கலந்து கொண்டனர் இந்நிகழ்வில் பங்கேற்றவர் தேநீர் வழங்கப் பட்டது.

இதனை தொடர்ந்து சிவகங்கை மாவட்ட திமுக சுற்றுச்சூழல் மாவட்டதுணை அமைப்பாளர் சாய் சுரேஷ் சார்பில் காரைக்குடி மாநகராட்சி முன்பு 500 பேருக்கு கலைஞர் பிறந்த நாளை முன்னிட்டு பிரியாணி வழங்கப்பட்டது.
மாவட்ட சிறுபான்மைப் பிரிவு துணை தலைவர் சேட் மாமன்ற உறுப்பினர் ராணி ஜெய்த்துன்சேட் ஆகியோரால் அரிசி வழங்கப்பட்டது.

பழைய பேருந்து நிலையம் அருகில் மாநகர பொருளாளர் PR.வைரவன் வட்டக்கழகச் செயலாளர் R.சிவக்குமார் பாண்டியன் ஆகியோர்கள் ஏற்பாட்டின் படி பிரியாணி வழங்கப்பட்டது .
மாவட்ட மகளிர் தொண்டரணி அணி அமைப்பாளர் மாமன்ற உறுப்பினர் ஹேமலதா செந்தில் ஏற்பாட்டின் படி இனிப்புகள் வழங்கப்பட்டது மாநகர துணை செயலாளர் லட்சுமி ராஜ்கணேஷ் சார்பில் இனிப்பு வழங்கி சிறப்பிக்கப் பட்டது .
நகரத்துணைச் செயலாளர் மாமன்ற உறுப்பினர் சொ.கண்ணன் வட்டக் கழக செயலாளர் நடராஜன் ஆகியோர் ஏற்பாட்டின்படி கலைஞர் அவர்களுக்கு புகழ் வணக்கம் செலுத்தப்பட்டு இனிப்பு வழங்கி சிறப்பித்தார்கள்.


மாலை 6.00மணி அளவில் மாவட்ட பொறியாளர் அணி துணை அமைப்பாளர் P.பாண்டிச் செல்வம் வட்டக்கழகச் செயலாளர் ஆனந்தன் மாநகர விளையாட்டு அணி அமைப்பாளர் K.அழகர் மாநகர இளைஞர்அணி துணை அமைப்பாளர் கௌதம் ஆகியோர்கள் ஏற்பாட்டில் முன்னாள்அமைச்சர் இலக்கியச் சூரியன் நற்றமிழ் நாவலர் மு.தென்னவன் மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் நாகனி செந்தில் குமார் மாநகர செயலாளர் மாநகர மேயர் பொறுப்பு நா.குணசேகரன் மாநகர கழக நிர்வாகிகள் சார்பு அணியின் அமைப்பாளர்கள் துணை அமைப்பாளர்கள் மற்றும் வட்டக்கழகச் செயலாளர்கள், வட்டக் கழக பிரதிநிதிகள் கலந்து கொண்டு கலைஞர் அவர்களுக்கு மலர்தூவி புகழ் வணக்கம் செலுத்தப் பட்டது.
நிகழ்வில் பள்ளி குழந்தை களுக்கு நோட்டு பென்சில் புத்தக பை போன்றப் பொருட்கள் பொதுமக்களுக்கு அரிசியும் வழங்கப்பட்டது . இந்நிகழ்வில் இளம் கழகச் சுடர் அன்பு தென்னவன் அ.சேவியர் மாநகர மாவட்டப் பிரதிநிதி காரைக்குடி மற்றும் திமுக நிர்வாகிகள்,தொண்டர்கள் எராளமானோர் கலந்து கொண்டனர்.

செய்தி& படங்கள்
சாய்தர்மராஜ்

கர்நாடகாவின் புதிய முதல்வராக டி.கே.சிவக்குமார் பதவியேற்பு..

சென்னை பள்ளிக்கரணையில் பெரும் தீ விபத்து..

Recent Posts