
உத்திரபிரதேச மாநிலம் அயோத்தியில் அமைந்துள்ள புகழ் பெற்ற ராமர் கோயிலில் தினமும் ரூ.6 -8 லட்சம் வரை நன்கொடை திருடப்பட்டது SIT விசாரணையில் தெரியவந்துள்ளது.
கடந்த 2025 மே மாதத்தில் இருந்தே ராமர் கோயிலில் நன்கொடை திருட்டு நடைபெற்று வருவதுள்ளது. தினமும் ரூ.6 லட்சம் 8 வரை திருடப்பட்டிருக்கலாம் என SIT விசாரணையில் தெரியவந்துள்ளது.
முன்பு தினமும்ரூ.16 – ரூ. 18 லட்சம் வரை டெபாசிட் செய்யப்பட்டு வந்த கோயில் பணம்,திருட்டு விவகாரம் வெளிவந்த பிறகு ரூ.24-ரூ.26 லட்சமாக அதிகரித்துள்ளது.
இந்த விவகாரத்தில் கைதானவர்கள் அண்மையில் வீடுகளை கட்டி,கார்கள் வாங்கியிரந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவர்களின் மாத சம்பளம் ரூ.15,000 என்பது குறிப்பிடத்தக்கது.
