
தவத்திரு குன்றக்குடி அடிகளாரின் 102-வது பிறந்த நாளை முன்னிட்டு நடைபெற்ற அரசு விழாவில், மாண்புமிகு இயற்கை வளங்கள் துறை அமைச்சர் டாக்டர்.டிகே.பிரபு பங்கேற்று ,அடிகளாரின் திருவுருவச்சிலைக்கு குன்றக்குடி ஆதினம் தவத்திரு குன்றக்குடி பொன்னம்பலம் அடிகளார் முன்னிலையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார், உடன் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ப.ஆகாஷ், இ.ஆ.ப., கலந்து கொண்டார்.
தவத்திரு குன்றக்குடி அடிகளார் அவர்களின் 102-வது பிறந்த நாள் அரசு விழாவினையொட்டி, சிவகங்கை மாவட்டம், குன்றக்குடி ஊராட்சியில் செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் அமைந்துள்ள தவத்திரு குன்றக்குடி அடிகளார் மணிமண்டபத்தில் உள்ள திருவுருவச்சிலைக்கு மாண்புமிகு இயற்கை வளங்கள் துறை அமைச்சர் டாக்டர்.டிகே.பிரபு , மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ப.ஆகாஷ், இ.ஆ.ப., , சட்டமன்ற உறுப்பினர்கள் திரு.சீனிவாச சேதுபதி (திருப்பத்தூர்) , திரு.இளங்கோவன் (மானாமதுரை) , குன்றக்குடி ஆதினம் தவத்திரு குன்றக்குடி பொன்னம்பலம் அடிகளார் அவர்கள் முன்னிலையில் அரசின் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
அதனைத்தொடர்ந்து, தவத்திரு குன்றக்குடி அடிகளார் மணிமண்டபத்தில் அமைக்கப்பட்டுள்ள தவத்திரு குன்றக்குடி அடிகளார் அவர்களுடன், பெருந்தலைவர்களான பகுத்தறிவுத்தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, பெருந்தலைவர் காமராஜர், டாக்டர் எம்.ஜி.ஆர், முத்தமிழறிஞர் கலைஞர், சுவாமி கிருபானந்த வாரியார் ஆகியோருடன் கலந்துரையாடிய புகைப்படங்கள், ஒற்றுமைக்காக பணியாற்றிய காலக்கட்டத்தின் புகைப்படங்கள் மற்றும் தற்போதுள்ள குன்றக்குடி ஆதினமாகிய, தவத்திரு குன்றக்குடி பொன்னம்பலம் அடிகளார் அவர்கள் விருதுகள் பெற்ற புகைப்படங்கள் என எண்ணற்ற அறியத்தக்க வகையிலான புகைப்படங்களை பார்வையிட்டனர்.
இந்நிகழ்ச்சியில், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் திரு.சு.ஜெகவீரபாண்டியன், திருப்பத்தூர் வட்டாட்சியர் திரு.மாணிக்கவாசகம் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
செய்தி & படங்கள்
சாய் தர்மராஜ்
