காரைக்குடி UpLift IAS அகடமி: ஓராண்டில் அபார சாதனை..

காரைக்குடியில் இன்றைய இளைய தலைமுறையின் கனவுகளை நிறைவேற்ற கடந்த ஓராண்டுக்கு முன் தொடங்கப்பட்ட UpLift IAS அகடமி பல்வேறு மாணவர்களுக்கு பயிற்சி கொடுத்து டிஎன்பிஎஸ்சி பொறியியல் தொழில்நுட்பத் தேர்வில் ( TNPSC Combined technical service exam (General studies)-2026 ) பல வெற்றிச்சாதனை படைத்தள்ளது UpLift IAS அகடமி.
தேர்வில் வெற்றிபெற்று பணி வாய்ப்பு பெற்ற மாணவ,மாணவியர்க்கு பாராட்ட விழா அகடமியில் நடைபெற்றது.


தமிழ்நாடு நீர்வளத்துறையில் உதவி பொறியாளர் பணித் தேர்வில் ராபின்.ஆர்.பி மாநில அளவில் 97வது ரேங்கில் வெற்றி பெறுள்ளார்.


தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறையில் உதவிப் பொறியாளர் தேர்வில் கோபிநாத் . என் வெற்றி பெற்றுள்ளார்.

அதே ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறையில் உதவிப் பொறியாளராக நரசிம்ம வர்மா.எம். வென்றுள்ளார்.

தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறையில் உதவிப் பொறியாளராக சிவப்பிரியா.எஸ் 24 ரேங்க் பெற்று வென்றுள்ளார்.


தேர்வில் வென்று பணி வாய்ப்பு பெற்றவர்களுக்கு UpLift IAS அகடமி பாராட்டு விழா நடைபெற்றது.


விழாவில் பேசிய சிறப்பு அழைப்பாளர் திருமதி.மீணாள் அவர்கள்பேசும் போது மாணவர்களே கல்விதான் பிரதானம் கல்வியே மூலதனம், உங்களுக்கு தேவையானவற்றை கடைநிலையில் உள்ள மாணவர்களை உயர்த்தும் நோக்கில் உருவாக்கப்பட்டதுதான் UpLift IAS அகடமி, சாதாரண கிராமபுற மாணவர்களுக்கு அரசாங்கப் பதவி எட்டாக்கனி என்று இருந்த காலத்தை மாற்ற UpLift IAS அகடமி உருவாக்கப்பட்டது. பிள்ளைகளுக்கு கடந்த காலங்கள் போல் இல்லாமல் தற்போது அனைத்து தரவுகளும் எளிதில் கிடைக்கின்றன.

நான் தமிழ் வழிக் கல்வியில் பயின்று பட்டமேற்படிப்பு ஆங்கில வழிக்கல்விக்கு மாறி பட்டம் பெற்று ஆசிரியாக பணியாற்றுகிறேன். மேலும் தனது இளமை கால பணிச்சுமை கல்வி பற்றி கூறியதோடு தன்னம்பிக்கை குறித்தும் பேசினார். உங்களுக்கு UpLift IAS அகடமி ஒரு நல் வாய்ப்பை வழங்கி வருகிறது, உங்களை உயர்த்துவதே நம் நோக்கம் என்றார். அனைவரும் படியுங்கள் நிச்சய வெற்றிக்கு நாங்கள் துணையிருப்போம் என்றார். தாய் தந்தையரை வணங்குங்கள் என்றார் வெற்றி பெற்றவர்களுக்கு பாராட்ட தெரிவித்தார்.


தொழிலதிபர் திரு. மரிங்கிபட்டி இரமேஷ் அவர்கள் பேசும் போது அரசுப்பணி என்பது அனைவரின் கனவு. அதை அடைய வழி தெரியாமல் பலரும் தவித்துக் கொண்டிருப்போம், நல்ல தகவல்களுடன் உங்கள் அரசுப்பணியைப் பெற ஏணியாக UpLift IAS அகடமி செயல் படுகிறது. வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துக் களைத் தெரிவித்தார்.

UpLift IAS அகடமியின் பொறுப்பாளர் யூனுஸ் முகமது வரவேற்றுப் பேசினார். இறுதியில் UpLift IAS அகடமியின் CEO பிரியதர்ஷ்னி நன்றி தெரிவித்தார்.

UpLift IAS அகடமியின் இயக்குனர் மயிலானந்தம் மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்த கொண்டனர்.

விழாவினை UpLift IAS அகடமியின் ஒருங்கிணைப்பு ஆலோசகர் விவேக் கிருஷ்ணன் ஒருங்கிணைத்தார்.

UpLift IAS அகடமியில் தற்போது TNPSC 1/2/2a/4- , TNPSC AE/IDO, NEET, JEE பயிற்சிகள் வழங்கப்பட்ட வருகின்றன. அரசுப்பணி தேடுபவர்களுக்கு UpLift IAS அகடமி உத்வேகமாக இருக்கும்.

வாருங்கள்..வெற்றி பெருங்கள் என்ற தாரக மந்திரத்தோடு UpLift IAS அகடமி உங்களை வரவேற்கிறது.
செய்தி& படங்கள்
சாய் தர்மராஜ்

இருளை விரட்டுவோம் “மீண்டும் வெற்றிச் சரிதத்தை எழுதுவோம்..” :மு.க.ஸ்டாலின்…

Recent Posts