காரைக்குடி செட்டிநாடு பப்ளிக் பள்ளி மாணவர்கள் 12-ஆம் வகுப்பு(சி பி எஸ் இ ) பொது தேர்வில் சாதனை ..

காரைக்குடி மானகிரி செட்டிநாடு பப்ளிக் பள்ளி மாணவர்கள் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளனர்.
செட்டிநாடு பப்ளிக் பள்ளி (சி பி எஸ் இ ) – பள்ளியில் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் 128 மாணவர்கள் தேர்வு எழுதினர். மாணவி கிருத்திகா 500 க்கு 486
மதிப்பெண்களுடன் 97.2% பெற்று முதலிடத்தையும், 478 மதிப்பெண்களுடன் 95.6 % பெற்று மாணவர் விஜயகணேசன் இரண்டாம் இடத்தையும், 471 மதிப்பெண்களுடன் 94.2% பெற்று மாணவி பூவிதா மூன்றாம் இடத்தையும் பெற்று பள்ளிக்கும் பெற்றோர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் பெருமை சேர்த்துள்ளனர்.

வெற்றி பெற்ற மாணவர்களை பள்ளியின் சேர்மன். திரு .SP. குமரேசன் , திருமதி. சாந்தி குமரேசன், துணைச் சேர்மன் திரு.K. அருண்குமார், திருமதி . ப்ரீத்தி அருண்குமார் ஆகியோர் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.

பள்ளியின் முதல்வர், துணை முதல்வர்
ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு வாழ்த்துகளைக் கூறி பாராட்டி மகிழ்ந்தனர்.
செய்தி &படங்கள்
சாய் தர்மராஜ்

12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வு :வித்யா கிரி மெட்ரிக் மெல்நிலைப்பள்ளி பள்ளி புதுவயல், காரைக்குடி மாணவ,மாணவிகள் அபார சாதனை…

பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றிய அமைச்சர் டாக்டர் டி.கே.பிரபு..

Recent Posts