12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வு :வித்யா கிரி மெட்ரிக் மெல்நிலைப்பள்ளி பள்ளி புதுவயல், காரைக்குடி மாணவ,மாணவிகள் அபார சாதனை…

2026-ஆண்டு 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வின் முடிவுகள் இன்று வெளியிடப்பட்டன. இதில் காரைக்குடி, புதுவயல் வித்யாகிரி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவ,மாணவியர் அதிக மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளனர்.

பொத்தேர்வு முடிவுகளில்:-
எஸ்.பவாணி- 598 / 600 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பெற்றுள்ளார். இவர் வணிகக் கணிதத்திலும் 100 மதிப் பெண்கள் பெற்றுள்ளார்.
எஸ்.சுபிஷா – 575 /600 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். ஜெ.பரதவாஜ்-570 மதிப்பெண்கள் , ஏஆர்.காயத்திரி-563 மதிப்பெண்கள். டி.தரணிதரன்-562 மதிப்பெண்கள், எஸ். ஜெயந்திகா, எஸ்.சண்முகப்பிரியா இருவரும் 599 மதிப்பெண்கள், எஸ்.சண்முகப்பிரியா வணிகக் கணிதத்திலும் 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்,கே.ஸ்ரீமஹா 556 மதிப்பெண்கள்,எஸ்.கே.சுவேதா-553 மதிப்பெண்கள் . இவர் கணனி அறிவியலில் 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.


தேர்வு எழுதிய அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்று 100 சதவிகிதம் வெற்றி பெற்றுள்ளனர். வெற்றி பெற்ற மாணவர்களை பள்ளி குழுமத் தலைவர் கிருஷ்ணன், தாளாளர் முனைவர் ஆர்.சுவாமிநாதன், பொருளாளர் ஹாஜி முகமது மீரா. வித்யா கிரி கல்வி நிறுவனங்களின் முதன்மை அதிகாரி ஐஸ்வரியா சரண் சுந்தர், வித்யா கிரி பள்ளி முதல்வர் ஹேமமாலினி, சுவாமிநாதன், புதுவயல் பள்ளி முதல்வர் கே.குமார் மற்றும் பள்ளி ஆசிரிய பெருமக்கள் அனைவரும் பாராட்டி மகிழ்ந்தனர்.

செய்தி &படங்கள்
சாய் தர்மராஜ்

திருப்பத்தூர் தேர்தல் முடிவை எதிர்த்து வழக்கு: உயதநிதி பேட்டி..

Recent Posts