
“கொள்கையற்ற, கட்டமைப்பற்ற கட்சிகள் வரும் போகும். மின்மினிப் பூச்சிகள் நிரந்தரம் கிடையாது. சூரியன்தான் நிரந்தரம். நிலைத்து நிற்கும்” கட்சி மறுசீரமைப்பு தொடர்பாக நிர்வாகிகளுடன் காணொலிக் காட்சி வாயிலாக நடந்த கூட்டத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
ஆணிவேரைப் பலப்படுத்தும் பெரும் பொறுப்பு உங்கள் கைகளில் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. கட்சியை மறுசீரமைப்போம்; மீண்டு வருவோம், மீண்டும் வெல்வோம் என அவர் கூறியுள்ளார்.
