கொளத்தூர் தவெக எம்எல்ஏ வி.எஸ். பாபு காலமானார்…

சென்னை மருத்துவமனையில் 70 நாட்களுக்கும் மேலாக தீவிர சிகிச்சை பெற்றுவந்த கொளத்தூர் தொகுதி எம்எல்ஏ வி.எஸ்.பாபு காலமானார். அவருக்கு வயது 75. இன்று பிற்பகல் 2.24 மணிக்கு உயிர் பிரிந்ததாக மருத்துவமனை தெரிவித்துள்ளது.

சென்னை கொளத்​தூர் தொகு​தி​யில் திமுக தலை​வரும், முன்னாள் முதல்வருமான மு.க.ஸ்​டா​லினை எதிர்த்து போட்​டி​யிட்டு வெற்றி பெற்​றதன் மூலம் தமிழகம் முழுவதும் வி.எஸ்​.​பாபு பிரபலம் அடைந்​தார். ஒரு மாத​மாக நடந்து வந்த சட்​டப்​பேரவை கூட்​டத்​தொடரில் பங்​கேற்ற அவருக்​கு, கடந்த செப்டம்பர் மாதம் 9-ம் தேதி இரவு மூச்​சுத்திணறல் ஏற்​பட்​டது. இதையடுத்​து, அவர் சென்னை அமைந்​தகரை நெல்​சன் மாணிக்கம் சாலை​யில் உள்ள எம்​ஜிஎம் ஹெல்த் கேர் மருத்துவமனை​யில் சேர்க்கப்பட்டார்.

அந்த சமயத்தில் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட பி.கே.சேகர்பாபு, புதிய வரவாக திமுகவுக்கு வந்தார். அவருக்கு ஸ்டாலின் முக்கியத்துவம் கொடுக்க ஆரம்பித்ததால் 2011 தேர்தலுக்குப் பிறகு ஸ்டாலினை எதிர்த்துக் கொண்டு திமுகவில் இருந்து விலகிய வி.எஸ்.பாபு, அதிமுகவில் இணைந்தார். ஆனால், ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு அதிமுகவிலும் அவருக்கான முக்கியத்துவம் குறைந்து போனது.

இதன் தொடர்ச்சியாக, 2017-ல் நடைபெற்ற ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் டி.டி.வி.தினகரனுக்கு ஆதரவாக களப்பணி செய்ததாகக் கூறி, 2018-ல் வி.எஸ்.பாபு உள்ளிட்ட 168 பேர் அதிமுகவில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டனர். அதன்பிறகு அமைதி காத்த பாபு, இபிஎஸ் பொதுச் செயலாளராக பொறுப்பேற்றதும் மீண்டும் அதிமுகவில் இணைந்தார். ஆனாலும், அதிமுகவிலும் அவருக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை. அதனால், அதிருப்தியில் இருந்து வந்த வி.எஸ்.பாபு, பின்னர் தவெக தலைவர் விஜய்யை சந்தித்து அக்கட்சியில் இணைந்து கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றது நினைவுகூரத்தக்கது.

அமர்நாத் ராமகிருஷ்ணா மலேசியா செல்ல அனுமதி மறுப்பு? : இ.கம்யூ மு.வீரபாண்டியன் கண்டனம்…

Recent Posts