திருப்பரங்குன்றம் கல்தூணில் தீபம் ஏற்ற உச்ச நீதிமன்றம் அனுமதி..

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் மலையில் உள்ள கல்த்தூணில் தீபம் ஏற்ற அனுமதிக்கும் சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு இடைக்கால தடை விதித்த உச்ச நீதிமன்றம், ஒருமுறை நடவடிக்கையாக வரும் கார்த்திகை தீபத்தன்று மட்டும் தீபத்தூணில் தீபம் ஏற்ற நிபந்தனைகளுடன் அனுமதித்துள்ளது. எனினும், இந்த அனுமதி என்பது இந்த வழக்கின் இறுதி ஒப்புதலாகக் கருதப்படக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.

திருப்​பரங்​குன்​றம் மலை​யில் உள்ள கல்​தூணில் தீபம் ஏற்ற அனுமதி அளித்து சென்னை உயர் நீதி​மன்​றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு மற்​றும் தர்கா நிர்​வாகம் தரப்​பில் உச்ச நீதி​மன்​றத்​தில் மேல்​முறையீடு தாக்கல் செய்​யப்​பட்​டது.

அதேபோல், கார்த்​திகை திருநாளன்று பக்​தர்​கள் அனைவரை​யும் மலை​யில் தீபம் ஏற்ற அனுமதிக்​கக் கோரியும், தொல்​லியல் துறை அனுமதி பெற வேண்​டும் என்ற சரத்​துக்கு எதிராகவும் ராம ரவிக்​குமார் என்​பவர் உச்ச நீதி​மன்​றத்​தில் மேல்​முறையீடு செய்​திருந்​தார்.

இந்த மனுக்​களை உச்ச நீதி​மன்ற நீதிப​தி​கள் அர​விந்த் குமார், விபுல்.எம்.பஞ்​சோலி ஆகியோர் அடங்​கிய அமர்வு விசா​ரித்தது. இரு தரப்பும் மூன்று நாட்கள் தங்கள் வாதங்களை முன்வைத்தனர்.

இரு தரப்பு வாதங்களைக் கேட்ட நீதிபதிகள் இன்று இடைக்கால உத்தரவைப் பிறப்பித்துள்ளனர். நீதிபதிகள் தங்கள் உத்தரவில், “திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற ஒருமுறை மட்டும் அனுமதி அளிக்கப்படுகிறது. எனவே, வரும் கார்த்திகை தீபத்தன்று (நவம்பர் 24) ஒருநாள் தீபத்தூணில் தீபம் ஏற்ற அனுமதிக்கப்படுகிறது.

அதேநேரத்தில், ஒருமுறை அனுமதி அளிப்பது பின்னாளில் ஒரு முன்னுதாரணமாக மாறிவிடக்கூடும் என்பதால் ஏற்படும் அபாயங்களை நீதிமன்றம் உணர்ந்திருக்கிறது. எனினும், உயர் நீதிமன்றத்தின் இரு வெவ்வேறு அமர்வுகள் தீபம் ஏற்ற அனுமதி அளித்திருப்பதை நீதிமன்றம் கவனத்தில் கொள்கிறது.

அதேசமயம், தீபத்தூணில் தீபம் ஏற்றுவதை ஓர் இன்றியமையாத நடைமுறையாக உறுதி செய்து கடந்த ஜனவரி 6 அன்று சென்னை உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் இறுதி கருத்துகளுக்கு தடை விதிக்கப்படுகிறது.

கொளத்தூர் தவெக எம்எல்ஏ வி.எஸ். பாபு காலமானார்…

Recent Posts