காரைக்குடியில் குளோபல் மிஷின் மருத்துவமனையில் எலும்பு அடர்த்தி சோதனை மற்றும் மூட்டு வலி இலவச மருத்துவ முகாம் ..

காரைக்குடியில் குளோபல் மிஷின் மருத்துவமனை ஆராய்ச்சி மையம், காரைக்குடி ரோட்டரி சங்கம், காரைக்குடி வெல்பர் அசோசேசன் இணைந்து நடத்திய மாபெரும் இலவச எலும்பு அடர்த்தி சோதனை மற்றும் மூட்டு வலி இலவச மருத்துவ முகாம் காரைக்குடி குளோபல் மெஷின் மருத்துவமனையில் சிறப்பாக நடந்தது .
இந்நிகழ்ச்சியில் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்துகொண்டு பயன் பெற்றனர். முதலில் நிகழ்ச்சியை மருத்துவமனை சேர்மன் மருத்துவர் குமரேசன் அவர்கள் அனைவரையும் வரவேற்றார் .
நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக எல் ஐ சி முகவரி சங்கத் தலைவர் மதுரை கோட்டம் மரிய லுயிஸ் சிறப்புரை ஆற்றினார். காரைக்குடி ரோட்டரி சங்க தலைவர் ருக்மா சரவணன் வாழ்த்துரை. காரைக்குடி வெல்பர் அசோசியேஷன் சங்கத்தின் சார்பாக இஸ்மாயில் வாழ்த்துரை வழங்கினார்.

மருத்துவ முகாமில் நான்கு சிறப்பு எலும்பு மூட்டு அறுவை சிகிச்சை நிபுணர்கள் பொதுமக்களுக்கு ஆலோசனை வழங்கினர். மேலும் முகாமில் வாசன் கண் மருத்துவமனை மூலமாக கண் பரிசோதனைகளும், வழங்கப்பட்டது. மேலும் பிசியோதெரபி மற்றும் ஆயில் தெரப்பி சிகிச்சையும் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு காரைக்குடி குளோபல் மெஷின் மருத்துவமனை விவேகானந்தன், டைம்ஸ் ஹெல்த் பவுண்டேஷன் மற்றும் சாரிட்டபிள் டிரஸ்ட் மூலம் நடைபெற்றது.

செய்தி & படங்கள்
சாய் தர்மராஜ்

அமைச்சர் மரிய வில்சன் “இங்கிலாந்தின் அரசர் அல்ல”: சென்னை உயர் நீதிமன்றம் கண்டனம்…

எவரெஸ்ட் மற்றும் LG நிறுவனங்கள் பெருங்காயத் தூள் விற்கத் தடை: FSSAI அறிவிப்பு…

Recent Posts