
காரைக்குடி அழகப்பா கல்வியியல் கல்லுாரி சார்பாக அக்டாபர் 9-தேதியன்று போதைக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்வு நடைபெற்றது.


இந்த போதைக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்வை அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தர் (பொறுப்பு) பேராசிரியர் முனைவர் ஜெ.ஜெயகாந்தன் தொடங்கி வைத்தார்.

அவர் பேசுகையில் போதைப் பொருள் என்பது தனிநபரின் பிரச்சனை அல்ல அது,குடும்பம், கல்லுாரி,பள்ளி சமூகம் என பல்வேறு வகையில் நாட்டின் எதிர்காலத்தைப் பாதிக்கக் கூடியது.

போதை பழக்கத்திலிருந்து இளம் தலைமுறையை நாம் பாதுகாக்க வேண்டும். மாணவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தவும் வருங்கால சமுதாயத்தை பாதுகாக்கவும் இது போன்ற போதைக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்வுகளை நடத்த வேண்டும் என்றார்..

போதைப் பழக்கத்தை முற்றிலும் ஒழித்து இளைய தலைமுறையினரின் கனவுகளை மெய்ப்படச் செய்திட வேண்டும் சினிமா,சமூக ஊடகத்தின் தாக்கம் திரையில் காட்டப்படும் போலி ஹீரோயிசம் நிஜ வாழ்க்கையில் வில்லனாக மாறிவிடும்..

மாணவர்களின் சிந்திக்கும் திறனை போதைப்பொருள் முதலில் தாக்கும், பொருளாதாரத்தை இழக்க வைக்கும். போதைப்பொருள் பாதிப்புகளைப் பற்றி விளக்க வேண்டும் என்றார்.


குளோபல் மிஷன் மருத்துவமனையின் சேர்மன் டாக்டர் .எம்.சி.வி.குமரேசன் பேசும் போது போதைப் பழக்கத்தால் மனிதன் 5 அறிவு மிருகமாக மாறிவிடுவான் போதைப் பழக்கத்தை தடுக்க வேண்டும் என்றார்.

முன்னதாக கல்வியியல் கல்லுாரியின் (பொறுப்பு) முதல்வர் மெர்லின் சசிகலா அனைவரையும் வரவேற்றார்.

மேலும் ஆட்சிக்குழு உறுப்பினர் பேராசிரியர்கள் வேதிராஜன், பாலமுருகன், வசீகரன், தொலைதுார மற்றும் இணையவழி கல்வி இயக்குளர் கண்ணபிரான், நிதி அலுவலர் சந்திர மோகன்,கல்வியியல் புல முதன்மையர் கலையரசன், சிறப்பு கல்வியியல் மற்றும் புனர்வாழ்வு துறை தலைவர் சுஜாதாமாலின், திரைப்படத்துறை தலைவர் சுதா, உதவி பேராசிரியர் பியோ அல்பினா பலர் கலந்து கொண்டனர். தேர்வாணையர் பேராசிரியர் ஜோதிபாசு நன்றி கூறினார்.

இந்த போதைக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்வில் நிஜ விபத்துபோல் மற்றும் அவசர ஊர்தி, மருத்துவர்கள்,செவிலியர்கள் மருத்துவபணியாளர்கள்,


போதைக்கு அடிமையாகி சிறையில் இருப்பவரின் தாய் மற்றும் கடும்பம் சிறைக்கு வெளியே அழும் காட்சி, போதையால் ஏற்படும் அனைத்து தீமைகள் குறித்தும் தத்ரூபமாக விளக்கப்பட்ட காட்சிகள். பொதுமக்களையும் பார்வையாளர்களையும் வெகுவாக ஈர்த்தது.

செய்தி& படங்கள்
சாய்தர்மராஜ்
