
கோவை குற்றாலத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் சுற்றுல்லா பயணிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. தென்மேற்கு பருவ மலை இரண்டு நாள்களுக்கு முன் கேரள மாநிலத்தில் தொடங்கியது.
அதனைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் மேற்கு தொடர்ச்சியை ஒட்டியுள்ள மாநிலங்களிலும் தென்மேற்கு பருவமலை பெய்து வருகிறது.
அன்மைக் காலமாக நீர் இன்றி காணப்பட்ட கோவை குற்றாலத்தில் தற்போது பெய்து வரும் கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் சுற்றுலாப்பயணிகள் குளிக்க தடைவிதிக்கப்பட்டள்ளது.
