
நினைத்தாலே முக்தித்தரும் திருத்தலம் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீபத்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
கோயிலின் 3ஆம் பிரகாரத்தில் உள்ள 64 அடி உயர தங்கக்கொடி மரத்தில் கொடியேற்றப்பட்டது. வரும் 24ம் தேதி அதிகாலை பரணி தீபமும் அன்று மாலை மலை 2662 அடி உயர மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட உள்ளது. 22-ஆம் தேதி திருத் தேரோட்டம் நடைபெறும். ஒவ்வொரு நாளும் அண்ணாமலையார் உண்ணாமலை அம்மன் பரிவார தெய்வங்களுடன் பகல,இரவு நேரங்களில் வீதியுலா நடைபெறம்.
