
நார்வே நாட்டின் Faroe Islands கனவு திட்டமான Rogfast சுரங்கப்பாதை திட்டத்தில் தான் இந்த அதிசயம் நடந்திருக்கு. இது தான் உலகத்துலேயே மிக நீளமான, மிக ஆழமான கடலுக்கடியிலான சாலை சுரங்கம். மொத்த நீளம் 27 கிலோமீட்டர் (16.6 மைல்). ஆழம் கிட்டத்தட்ட 392 மீட்டர்.
இதுல என்ன சிறப்பு என்றால் வரலாற்றுல முதல் முறையா கடலுக்கு அடியில ரெண்டு ரவுண்டானாக்களை வெட்டி கட்டி முடிச்சிருக்காங்க. கடல் மட்டத்துல இருந்து சரியா 820 அடி ஆழத்தில் அமைந்துள்ளது.
இந்த ரவுன்டாணா ஜெல்லி மீன் வடிவில் அமைக்கப்பட்டள்ளது. இந்த கடலுக்கடியிலான பாதை இரு Streymoy and Eysturoy தீவுகளுக்குச் செல்கிறது.
Boknafjord கடல் பகுதிக்கு கீழ் இருக்கிற Streymoy and Eysturoy இரு சின்ன தீவுக்காக இந்த இரண்டு அடுக்கு ரவுண்டானா அமைக்கப்பட்டள்ளது. அந்த தீவுல மொத்தமே 576 பேர் தான் இருக்காங்க. அவங்களுக்காக 2.2 மைல் நீளத்துக்கு தனியா ஒரு கிளை சுரங்கமும் கட்டியிருக்காங்க.
நார்வே அரசின் நெடுஞ்சாலைத்துறை Statens vegvesen கடந்த பிப்ரவரி 2026-ல் இந்த சந்திப்பு முழுசா தோண்டி முடிக்கப்பட்டதா அதிகாரப்பூர்வமா அறிவித்துள்ளது.
2033-ல் இந்த சுரங்கம் திறக்கப்படும் போது, பல மணிநேரம் படகுக்காக காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை, இனி வருடம் முழுவதும் கார்ல் பயணம் செய்யலாம். பொறியியல் உலகத்தின் மிகப்பெரிய சாதனைகளில் ஒன்றாக இது பார்க்கப்படுது.
Source: Statens vegvesen, MIT Technology Review
