உலக கோப்பை கால்பந்து திருவிழா :இன்று நள்ளிரவு பிரமாண்டமாக தொடங்குகிறது..

கால்பந்து ரசிகர்களின் கொண்டாடமான உலக கோப்பை கால்பந்து திருவிழா இன்று நள்ளிரவு பிரமாண்டமாக தொடங்குகிறது.
026-ம் ஆண்டு உலகக் கோப்பை கால்பந்து தொடரில் கலந்து கொண்டுள்ள 48 அணிகளும் 12 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன.

ஒவ்வொரு பிரிவிலும் 4 அணிகள் இடம் பெற்றுள்ளன. லீக் சுற்றில் ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோதும். லீக் சுற்றின் முடிவில் 12 பிரிவிலும் முதல் 2 இடங்களைப் பிடிக்கும் அணிகள் என 24 அணிகள் நேரடியாக அடுத்த சுற்றுக்குத் தகுதி பெறும். இது தவிர, 3-வது இடத்தைப் பிடிக்கும் அணிகளில் சிறந்த புள்ளிகள், கோல் வித்தியாசங்களை அடிப்படையாகக் கொண்ட 8 அணிகளும் அடுத்த சுற்றுக்கு முன்னேறும்.

இந்த 32 அணிகளும் ரவுண்ட் ஆஃப் 32 என்ற புதிய நாக்-அவுட் சுற்றில் பலப்பரீட்சை நடத்தும். இதில் இருந்து 16 அணிகள் அடுத்த நாக்-அவுட் சுற்றில் மல்லுக்கட்டும். இந்த சுற்றில் இருந்து 8 அணிகள் கால் இறுதிக்கும், அங்கிருந்து 4 அணிகள் அரை இறுதிக்கும் முன்னேறும். அரை இறுதியில் வெற்றி பெறும் அணிகள் சாம்பியன் பட்டத்துக்கான இறுதிப் போட்டியில் பலப்பரீட்சை நடத்தும்.

லீக் சுற்று இன்று முதல் வரும் 28-ம் தேதி வரை நடைபெறுகின்றன. ரவுண்ட் ஆஃப் 32 சுற்று ஜூன் 29 முதல் ஜூலை 4 முதல் வரையும், ஜூலை 4 முதல் 7 வரை கால் இறுதிக்கு முந்தைய சுற்றும் (ரவுண்ட் ஆஃப் 16) நடைபெறுகின்றன.

கால் இறுதி ஆட்டங்கள் ஜூலை 10 முதல் 12 வரையும் அரை இறுதி ஆட்டங்கள் ஜூலை 15, 16-ம் தேதிகளிலும், 3-வது இடத்துக்கான ஆட்டம் ஜூலை 19-ம் தேதியும், இறுதிப் போட்டி ஜூலை 20-ம் தேதியும் நடைபெறுகின்றன. போட்டிகள் அனைத்தும் ஜீ தொலைக்காட்சியில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

உலகக் கோப்பை கால்பந்து தொடரில் 1,248 வீரர்கள் இடம் பெற்றுள்ளனர். இவர்களில் 357 வீரர்கள் ஏற்கெனவே உலகக் கோப்பையில் விளையாடிய அனுபவம் வாய்ந்தவர்கள். அதே வேளையில் 891 வீரர்கள் முதன்முறையாக உலகக் கோப்பையில் களம் காண்கின்றனர்.

உலகக் கோப்பைத் தொடரில் களம் காணும் அனைத்து வீரர்களையும் விட மிக அதிக அளவிலான சர்வதேச போட்டிகளில் விளையாடிய வீரர் என்ற பெருமையை போர்ச்சுகல் நட்சத்திரம் கிறிஸ்டியானோ ரொனால்டோ பெற்றுள்ளார். அவர், 226 சர்வதேச போட்டிகளில் விளையாடி உள்ளார். ஆடவர் கால்பந்து வரலாற்றில் ஒரே வீரர் இத்தனை சர்வதேசப் போட்டிகளில் விளையாடியிருப்பது இதுவே முதல்முறையாகும்.

அர்ஜெண்டினா நட்சத்திரம் லயோனல் மெஸ்ஸியுடன் இணைந்து 6-வது முறையாக களமிறங்கும் வீரர் என்ற சாதனையையும் படைக்க உள்ளார் ரொனால்டோ. உலகக் கோப்பை தொடர்களில் கிறிஸ்டியானோ ரொனால்டோ 22 போட்டிகளில் விளையாடி 8 கோல்கள் அடித்துள்ளார். அவர், விளையாடி உள்ள 5 உலகக் கோப்பையிலும் கோல் அடித்து அசத்தியுள்ளார்.

கடந்த 22 உலகக் கோப்பைத் தொடர்களில் நடத்தப்பட்ட 964 போட்டிகளில் ஒட்டுமொத்தமாக 2,720 கோல்கள் அடிக்கப்பட்டுள்ளன. 2026-ம் ஆண்டு உலகக் கோப்பை தொடரில் கூடுதலாக 40 போட்டிகள் நடத்தப்படவுள்ளதால், இதற்கு முன்பு 2022 கத்தார் உலகக் கோப்பையில் படைக்கப்பட்ட ஒரு தொடரின் அதிகபட்ச கோல் சாதனையான 172 கோல்கள் இந்த முறை நிச்சயம் முறியடிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

2026-ம் ஆண்டு உலகக் கோப்பைத் தொடரின் மிக மூத்த வீரருக்கும், மிக இளைய வீரருக்கும் இடையே 25 ஆண்டுகளுக்கும் மேலான வயது வித்தியாசம் உள்ளது. ஸ்காட்லாந்து அணியின் கோல்கீப்பர் கிரேக் கார்டன் தொடரின் முதல் நாளில் 43 ஆண்டுகள் மற்றும் 162 நாட்கள் வயதானவராக மிக மூத்த வீரராகக் களம் காண்கிறார்; அதே வேளையில், மெக்சிகோவின் கில்பர்ட் மோரா வெறும் 17 ஆண்டுகள் மற்றும் 240 நாட்கள் மட்டுமே நிரம்பிய மிக இளைய வீரராகக் களமிறங்குகிறார்.

காரைக்குடியில் அறுவை சிகிச்சை விவகாரம்: இந்திய மருத்துவ சங்கம் விளக்கம்…

Recent Posts