
காரைக்குடி மானகிரி அப்பலோ மருத்துவமனை மாவட்டத்தில் முதல்முறையாக எண்டோஸ்கோபிக் தண்டுவட அறுவை சிகிச்சையை வெற்றிகரமாகச் செய்து சாதனை புரிந்துள்ளது.
இந்த சாதனை குறித்து மூளை மற்றும் தண்டுவட அறுவை சிகிச்சை மூத்த ஆலோசகர் டாக்டர். சதீஷ்கண்ணன், மூளை மற்றும தண்டுவட அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் கெவின், எலும்பு மற்றும் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் முத்தமிழ் செல்வன் ஆகியோர் கூறுகையில் “முதுகு மற்றும் கழுத்து வலியால் அவதிப்படுபவர்களுக்கு மாவட்டத்திலேயே முதன்முறையாக எண்டோஸ்கோபிக் தண்டுவட அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக மேற்கொண்டுள்ளோம்.

பழைய முறை அறுவை சிகிச்சையில் 25 முதல் 30 மி.மீ கீறல் தேவைப்படும் ஆனால் நவீன முறையில் 4 முதல் 5 மி.மீ சிறிய 2 துளைகளே போதுமானது.அதன் உள்ளே ஊடுருவல் முறையில் காமிராவை உள்நுழைத்து அதன் மூலம் மருத்துவக் கருவிகளை உள்ளே செலுத்தி நரம்புகளை அழுத்தும் வட்டின் பகுதி மட்டும் துல்லியமாக அகற்றப்படும்.
வட்டு பிதுக்கத்தால் கழுத்து,முதுகுவழி,சியாட்டிகா,உணர்ச்சியின்மை மற்றும் தசை பலவீனம் ஏற்பட்டுள்ளவர்கள் இந்த சிகிச்சையை எடுத்துக்காள்ளலாம். எம்.ஆர்.ஐ., அல்லது சி.டி.ஸ்கேனில் நரம்பு அழுத்தம் உறுதி செய்யப்பட்டால் சிகிச்சை மேற்கொள்ளப்படும்.

தொடக்க காலத்தில் கனமான பொருட்களைத் துாக்குவதைத் தவிர்க்க வேண்டும். தண்டுவட நிபுணரின் பரிசோதனைக்குப் பின் சிகிச்சை குறித்த தீர்மானிக்கப்படும். அரசு மருத்துவக் காப்பீடு மற்றும் தனியார் மருத்துவக் காப்பீட்டில் சிகிச்சை பெறலாம். பயப்படத் தேவையில்லை, வலியில்லாமல் அறுவை சிகிச்சை மெற்கொள்ளப்படுகிறது. அறுவை சிகிச்சையின் போது பக்கவாதம் ஏதும் ஏற்படாது. ஓரிரு நாட்களில் எழுந்து நடக்கலாம், வலி வேதனைகள் இதர தொந்தரவுகள் இருக்காது என்று கூறினர்.

அப்பலோ மருத்துவமனை செயல் அதிகாரி டாக்டர் நிகிழ் திவாரி சிறப்புரையாற்றினார். யூனிட் கெட் டாக்டர் கௌதம கார்த்திகேயன், மருத்துவ தலைவர் டாக்டர் அல்தாஃப்கான் ஆகியோர் கலந்து கொண்டனர்.
செய்தி & படங்கள்
சாய்தர்மராஜ்
