
காரைக்குடியில் அமைந்துள்ள மத்திய மின்வேதியல் ஆராய்ச்சி நிறுவனம் (CSIR-CECRI )- தனது 79வது நிறுவன நாள் விழாவை 2026 சூலை 25 அன்று வெகு விமரிசையாக நடைபெற்றது.
நிகழ்ச்சியில், சிக்ரியின் முதன்மை விஞ்ஞானி டாக்டர் ஜே.மதியரசு, சிறப்பு விருந்தினர்களையும், பெருமளவில் திரண்டிருந்த பங்கேற்பாளர்களையும் வரவேற்றார். அரவது வரவேற்புரையில், நிறுவனத்தில் தோற்ற வரலாற்றை நினைவுகூர்ந்து, சிக்ரியின் உறுப்பினர்கள் அனைவரும் நிறுவனத்தின் எதிர்கால நோக்கங்களை முன்னெடுப்பதில் மீண்டும் உறுதியேற்குமாறு அழைப்பு விடுத்தார்.

சிக்ரியின் இயக்குனர் டாக்டர் கே. ரமேஷா, தனது தலைமையுரையை பத்ம பூஷண் டாக்டர் ஆர்.எம். அழகப்பா செட்டியார் அவர்களுக்கு ஆழ்ந்த மரியாதை செலுத்துவதன் மூலம் தொடங்கினர். அன்னாரின் தொலைநோக்குப் பார்வை மற்றும் தன்னலமற்ற பங்களிப்பு இல்லையெனில், காரைக்குடியில் சிக்ரி நிறுவப்பட்டிருக்க முடியாது என அவர் குறிப்பிட்டார்.

தொடர்ந்து, டைட்டானியம் சப்ஸ்ட்ரேட் இன்சாலியூபிள் அனோடு (TSIA), அரிமானத்தை தடுக்கும் மற்றும் குறைக்கும் தொழில்நுட்பங்கள், ஆற்றல் சாதனங்கள் – மின்கலங்கள், மூப்பர் கேபாசிட்டர்கள், எரிபொருள் செல்கள், மின்னாற்பகுப்பில்(Electrolysers), அரிய மண் மற்றும் முக்கிய கனிமங்களின் மீட்பு போன்ற துறைகளில் சிக்ரி வழங்கிய முன்னோடியான தொழில்நுட்பப் பங்களிப்புகளை எடுத்துரைத்தார். ஒரே நாணயத்தின் இரு பக்கங்களைப் போல, அடிப்படை ஆராய்ச்சிக்கும் பயன்பாட்டு ஆராய்ச்சிக்கும் சமமான முக்கியத்துவம் வழங்கப்பட வேண்டும். அதுவே நிறுவனத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு வழிவகுக்கும் என்றார். பின்னர், கடந்த ஆண்டில் நிறுவனம் அடைந்த சாதனைகள் மற்றும் முன்னேற்றங்களைப் பட்டியலிட்டார். அவற்றில் சென்னையில் நடைபெற்ற Research-IndustryStartup-Entrepreneurship (RISE) Conclave 2026 , புதிய ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத் திட்டங்கள், தொழில்நுட்பப் பரிமாற்றங்கள், கூடுதல் ஆராய்ச்சி உள்கட்டமைப்பு உருவாக்கம், சி.வி.ராமன் சர்வதேச ஆய்வாளர் விடுதி திறப்பு, புதிய முனைவர் நிர்வாகப் பணிகளையும் காலமுறைப்படி நிறைவு செய்தல், பணியாளர் மன்றத்தின் மூலம் நடைபெற்ற கலாச்சார, சமூக மற்றும் விளையாட்டு நிகழ்வுகள் உள்ளிட்டவை இடம்பெற்றன.

பெங்களுருவில் அமைந்துள்ள CSIR– தேசிய விண்வெளி ஆய்வகத்தின் (CSIR- ) இயக்குனர் டாக்டர் அபய் ஏ. பஷில்கர், இந்நிகழ்வில் தலைமை விருந்தினராக கலந்து சிறப்பித்தார். -இல் மேற்பரப்பு பொறியியல் தொழில்நுட்பங்கள் மற்றும் வான்வழி வாகனங்களின் வளர்ந்து வரும் தேவைகள்” என்ற தலைப்பில் சிக்ரியின் 79 வது நிறுவன நாள் சிறப்புரையை ஆற்றினார்.

நிகழ்ச்சியின் நிறைவில் சிக்ரியின் நிர்வாக அலுவலர் திரு.அருண் மணிகண்ட பாரதி நன்றியுரை வழங்கினார்.
முன்னதாக, டாக்டர் பஷில்கர், சிக்ரி வளாகத்தில் புதிதாக அமைக்கப்பட்ட உலோகவியல் பகுப்பாய்வு மற்றும் பரிசோதனை ஆய்வகத்தை()நிறுவனத்தில் பிரதான நுழைவாயிலில் அமைக்கப்பட்ட செல்ஃபி பாயின்டையும் திறந்து வைத்தார்.
செய்தி & படங்கள்
சாய்தர்மராஜ்
