‘ அதிமுக எஃகு கோட்டை எவராலும் அசைக்க முடியாது’ : அதிமுக ட்வீட்…

சட்டப்பேரவைத் தேர்தல் மடிந்த பிறகு அதிமுக இரண்டாக சி.வி.சண்முகம், எஸ்.பி. வேலுமணி தலைமையில் 21 சட்டமன்ற உறுப்பினர்கள் தவெக-விற்கு ஆதரவளித்தனர். இந்நிலையில் 4 சட்டமன்ற உறுப்பினர்கள் பதவி விலகி தவெகவில் இணைந்தனர்.

இந்நிலையில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியைச் சந்தித்து சி.வி. சண்முகம் தவிர வேலுமணி தலைமையில் அனைவரும் எடப்பாடி பழனிச்சாமி இல்லத்தில் சந்தித்து இரண்டு அணிகளும் இணைகின்றனர்.

‘கோடான கோடி தொண்டர்களின் தியாகத்தால் வளர்ந்த இந்த எஃகு கோட்டையை இனி எவராலும் அசைக்க முடியாது. இனி நமக்குள் பிரிவில்லை. நம் இலக்கு ஒன்றுதான். அது கோட்டையில் மீண்டும் நமது இரட்டை இலை கொடி பறப்பது மட்டுமே.’ என அதிமுக தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அதிமுக ஐடி விங்க் வெளியிட்ட எக்ஸ் பதிவில், எனக்கு பின்னாலும் இன்னும் எத்தனை நூற்றாண்டுகள் ஆனாலும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் மக்களுக்காகவே இயங்கும் என ஜெயலலிதா தெரிவித்திருந்தார்.
கோடான கோடி தொண்டர்களின் தியாகத்தால் வளர்ந்த இந்த எஃகு கோட்டையை இனி எவராலும் அசைக்க முடியாது. இனி நமக்குள் பிரிவில்லை. இந்த எஃகு கோட்டையை தகர்க்க இனி எவருக்கும் வழியில்லை. நம் இலக்கு ஒன்றுதான். அது கோட்டையில் மீண்டும் நமது இரட்டை இலை கொடி பறப்பது மட்டுமே. நாளை நமதே, தமிழ்நாடும் நமதே என தெரிவிக்கப்பட்டுள்ளது.

காரைக்குடி இரயில் நிலையத்தில் குட்கா பறிமுதல்..

டெல்லியில் பிரதமர் மோடியுடன் முதல்வர் விஜய் சந்திப்பு..

Recent Posts