
காரைக்குடி குளோபல் மிஷின் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையத்தில் உள்ள விழா அரங்கில் காலையில் குளோபல் மிஷின் மருத்துவமனை மற்றும் ஜோஹோ கார்ப்பரேஷன் நிறுவனமும் இணைந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்பட்டது.
இந்த நிகழ்வு குறித்து மருத்துவமனை சேர்மன் குமரேசன் கூறியதாவது
தென்மாவட்டத்திலேயே முதன் முறையாக காரைக்குடி Global Mission Hospital, Zoho Corporation உடன் (GZ MediFusion System) என்ற மூலோபாய கூட்டாண்மையை அறிவித்துள்ளது.
இந்த கூட்டாண்மை Zoho for Healthcare வழியாக, நோயாளி பராமரிப்பு மற்றும் மருத்துவமனை செயல்பாடுகளை மேம்படுத்தும் ஒரு ஒருங்கிணைந்த டிஜிட்டல் சூழலை உருவாக்கும் நோக்கத்துடன் அமைந்துள்ளது.

இந்த முயற்சியின் ஒரு பகுதியாக, மருத்துவ அமைப்புகளை நவீனமயமாக்கவும் வலுப்படுத்தவும், Zoho நிறுவனத்தின் மேம்பட்ட தொழில்நுட்பங்களை எங்கள் மருத்துவமனை பயன்படுத்த உள்ளது.
மருத்துவம் மற்றும் சுகாதாரத் துறையில் டிஜிட்டல் மாற்றம் மிகவும் அவசியமாகிவரும் நிலையில், குறிப்பாக Ayushman Bharat Digital Mission (ABDM) செயல்படுத்தப்பட்டு வரும் இந்த காலத்தில், குளோபல் மெஷின் மருத்துவமனை Zoho-வை தனது தொழில்நுட்ப கூட்டாளியாகத் தேர்ந்தெடுத்துள்ளது.
இந்த திட்டம் 40+ கிளினிக்குகள், தற்போதைய மல்டிஸ்பெஷாலிட்டி மருத்துவமனைகள் மற்றும் 2027-க்குள் நிறைவடைய இருக்கும் இரண்டு சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைகளையும் உள்ளடக்கும்.

50-க்கும் மேற்பட்ட ஒருங்கிணைந்த செயலிகளைப் பயன்படுத்தி, Zoho for Healthcare குழு அடுத்த 2–3 ஆண்டுகளில் மருத்துவமனை குழுவின் டிஜிட்டல் மாற்றத்தை முன்னெடுக்க உள்ளது. இந்த முயற்சி நோயாளி ஈடுபாட்டை மேம்படுத்தவும், பணிச்சூழல்களை எளிமைப்படுத்தவும், அனைத்து மையங்களிலும் பணியாளர் திறனை அதிகரிக்கவும் உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்றார்.
முன்னதாக குளோபல் மிஷின் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையத்தின் சேர்மனும் மருத்துவருமான.குமரேசன்- ஜோஹோ இயக்குனர் பாலகிருஷ்ணன் ஆகியோர் இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது.
நிகழ்ச்சியில் ஜோஹோ சுகாதாரதுறை மற்று தொழில்நுட்ப இயக்குனர் அமுல்ராஜ் பேச்சிமுத்து மற்றும் நிர்வாகிகள் பேசினர்.குளோபல் மிசின் மருத்துவமனை நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தது.
செய்தி படங்கள்
சிங்தேவ்
