
குவைத் சர்வதேச விமான நிலையம் மீது ஈரான் நடத்திய தாக்குதலில் இந்தியர் ஒருவர் உயிரிழந்துள்ளார், 63 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்
விமான நிலையத்தின் ஒரு பகுதி கடுமையாக சேதமடைந்துள்ளதால், மறு அறிவிப்பு வரும் வரை சேவைகள் நிறுத்தப்பட்டள்ளன.
இன்று அதிகாலை குவைத் சர்வதேச விமான நிலையம் மீது ஈரான் நடத்திய தாக்குதலில் இந்தியர் ஒருவர் உயிரிழந்ததாக அந்த நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
கேஷம் தீவில் அமெரிக்க அத்துமீறி நடத்திய தாக்குதலுக்க பதிலடியாக குவைத்,பக்ரைன் மிது ஈரான் தாக்குதல் நடத்தியதால் மத்திய கிழக்கு நாடுகளில் போர் பதற்றம் அதிகரித்தள்ளது.
இந்நிலையில் குவைத் மீதான தாக்குதலுக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. சிவில் உள்கட்டமைப்புகள் குறிவைக்கப்படக் கூடாது என்று அனைத்து தரப்பும் உறுதி செய்ய வேண்டும் என இந்தியா கூறியுள்ளது.
