
காவிரி நீர் மேலாண்மை ஆணைய உத்தரவின்படி காவிரியில் தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறந்துவிட கர்நாடக அரசுக்கு உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டு உள்ளது.
தமிழக அரசு மற்றும் திமுக தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட அவசர வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், விசாரணையின் போது மழைநீரை முழுமையாக தேக்க முடியாது என்பதால், நீரை கர்நாடகம் திறந்து விட்டுள்ளதாக என கருத்து தெரிவித்துள்ளது.History
காவிரி நீர் மேலாண்மை ஆணையம் (CWMA) மற்றும் ஒழுங்குமுறைக் குழு (CWRC) பிறப்பிக்கும் நீர் பங்கீட்டு உத்தரவுகளை கர்நாடகா அரசு கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டும் எனவும் விசாரணையின் போது உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
வழக்கு விசாரணையின் போது காவிரி ஒழுங்குமுறை குழு மற்றும் மேலாண்மை ஆணையம் பரிந்துரைத்த அளவை விடக் கர்நாடகா மிகக் குறைந்த அளவே நீரை திறந்துள்ளதாக வாதிடப்பட்டது.
அதே போல கர்நாடகாவின் கிருஷ்ணராஜ சாகர், கபினி உள்ளிட்ட 4 முக்கிய அணைகளிலும் போதிய நீர் உள்ளது. எனவே, தமிழகத்திற்குரிய விகிதாச்சார பங்கீட்டு நீரை திறப்பதில் எந்த சிரமமும் கர்நாடகாவுக்கு இருக்காது என்றும் தமிழக அரசு வாதிட்டது.
இதனை தொடர்ந்து காவிரியில் தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறந்துவிட உத்தரவிட்டு, நீர் திறப்பு குறித்த தரவுகளை தாக்கல் செய்ய கூறி வரும் 24-ஆம் தேதிக்கு வழக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது
