காரைக்குடி மத்திய மின் வேதியியல் ஆராய்ச்சி நிறுவனம் (CECRI)யில் செப்.26 பார்வையாளர்கள் தினம்..

காரைக்குடி மத்திய மின் வேதியியல் ஆராய்ச்சி நிறுவனம் (CECRI)யின் 85-வது நிறுவன நாளை முன்னிட்டு வரும் செப்டம்பர் 26,27 தேதிகளில் அறிவியல் ஆராய்ச்சிகளைப் பொதுமக்கள் பார்வையிட அனுமதிக்கப்படுகிறது.

ஒன்றிய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுற்பத்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் 37 ஆராய்ச்சி நிறுவனங்களில் ஒன்றாக காரைக்குடியில் சிக்ரி நிறுவனம் செயல்படுகிறது. ஆண்டு தோறும் சி.எஸ்ஐ.ஆர் நிறுவன நாளை நினைவு கூறும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர்-26-ஆம் தேதி அறிவியல் கண்டுபிடிப்புகளைப் பொதுமக்கள் பார்வையிட அனுமதிக்கப்படுகிறது.

இந்தாண்டு வரும் செப்.26, 27 தேதிகளில் பொதுமக்கள் பார்வைக்கு அனுமதிக்கப்படவுள்ளது. இந்நாளில் பள்ளி,கல்லுாரி மாணவ,மாணவியர்கள், தொழில் முனைவோர், பொதுமக்கள் ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்புகளை காலை 10 மணி முதல் மாலை 4.30 வரை பார்வையிடலாம்.

உலோக அரிமான தடுப்பு,புராணகால மற்றும் தற்கால மின்கலம், தொழிற்சாலைக்கு உபயோகமான இராசாயனங்கள்,துாய நலையில் ஆற்றல், மின் வேதியியல் உணரிகள், மின் வேதியியல் துறைக்கான கனிம மூலப்பொருட்கள், மின் கனிம மற்றும் கனிம வேதியியல், நோய் கிருமிகளை ஆராயப் பயன்படும் பயோ சென்டசார்கள், மின்முலாம் பூசுதல் மற்றும் நானோ மின் வேதியியல் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் கண்டுபிடிக்கப்பட்ட ஆராய்ச்சி மாதிரிகள், அதன் செயல்.விளக்க முறைகள், வண்ணப்படங்களாக காட்சிக்கு வைக்கப்படுகிறது.

மேலும் பார்வையாளர்கள் தினத்தை முன்னிட்டு அறிவியல் வினாடி வினா நிகழ்ச்சியும் நடைபெறவுள்ளது. காரைக்குடி அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள பள்ளி மற்றும் கல்லுாரி மாணவர்கள், பொதுமக்கள் என அனைவரும் அறிவியல் கண்டுபிடிப்புகளைப் பார்வையிடும் ஒரு அறிய அருமையான ஒரு வாய்ப்பு ..

செய்தி& படங்கள்
சாய்தர்மராஜ்

இந்தியாவின் முதல் டெங்கு தடுப்பூசி 2027-க்குள் பயன்பாட்டுக்கு வரும் : ICMR நம்பிக்கை..

Recent Posts