
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தாலுகாவில் அக்டாபர்-13-ஆம் தேதி விவசாயிகள் குறை தீர்ப்பு முகாம் தாலுகா அலுவலகத்தில் நடைபெற்றது.
இந்த முகாமில் கலந்து கொண்ட விவசாயப் பெருமக்களுக்கு சேதுபாஸ்கரா வேளான்மைக் கல்லுாரி மற்றும் அறிவியல் ஆராய்ச்சி மாணவிகள் விவசாயிகளின் பெரும் பிரச்சனைகளாக உருவாகிவரும் எல்நினோ பாதிப்பு, போதிய தண்ணீர் இன்மை, விவசாயப் பணிகளுக்கு ஆள்பற்றாக்குறை,இவற்றால் வருமானமின்றி பாதிக்கப்படுவதைச் சுட்டிக்காட்டி அவர்களுக்கு நிரந்தரமான வருவாய் ஈட்டும் வகையில் மைக்ரா கிரின்ஸ் (தானிய முளைக்கட்டிய பயிர்) தயாரிப்பது குறித்து விரிவாக செயல்விளக்கம் கொடுத்தனர்.

மேலும். இந்த மைக்ரா கிரின்ஸ்-ல் உள்ள சத்துக்கள் சாதாரணமாக நாம் சமைத்து உண்ணும் காய்கறிகளை விட அதிக சத்துக்களைக் கொண்டது. குறிப்பாக புரதசத்து, நார்ச்சத்து,வைட்டமின்கள் அதிகம் கொண்டவை ஆரோக்கியத்திற்கு தேவையான அனைத்து சத்துக்களும் அடங்கியுள்ளதை விளக்கினர். இது தாயாரிக்கும் முறை மிகவும் எளிது, செலவினமும் குறைவு. தற்போது சந்தையில் இதற்கான தேவைகள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக பெண்கள் தங்களின் சுய தொழிலாக இதை செய்து வருமானம் ஈட்டலாம் எனத் தெரிவித்தனர்.

சேதுபாஸ்கரா வேளான்மைக் கல்லுாரியில் ஊரக வேளாண்மைப் பணி அனுபவத் திட்ட பயிற்சி மாணவிகளான ஸ்ரீநிதி.ரா, நாகமீனா.மா,மகாலெட்சுமி.மு, அமிர்த ஸ்ரீ.க,பூஜா ஸ்ரீ.செ, கௌரி.சு மாணவிகளை குறைதீர்ப்பு முகாமில் கலந்து கொண்ட வேளாண் அதிகாரிகள். விவசாயிகள் பாராட்டினர்.
