அண்ணாமலையின் ‘வீ த லீடர்ஸ்’ (We the Leaders) அமைப்பிற்கு ஆள் சேர்ப்பு முகாம்..

அண்ணாமலையின் ‘வீ த லீடர்ஸ்’ (We the Leaders) அமைப்பிற்கு சிவகங்கை மாவட்ட முன்னாள் பாஜக நிர்வாகிகள் ஆள் சேர்ப்பு முகாம் நடத்தி வருகின்றனர்.
இந்த முகாம் குறித்த காரைக்கடியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பாஜக முன்னாள் மாவட்ட அலுவலக செயலாளர் விநாயகம் பேசும் போது இங்கு கூடியிருக்கும் நாங்கள் மன்னாள் பாஜக நிர்வாகிகள் நாங்கள் பாஜக கட்சியிலிருந்து விலகியிருந்தோம் தற்போது அண்ணாமலை அவர்களின் புதிய சமூக இயக்கமான ‘வீ த லீடர்ஸ்’ (We the Leaders) என்ற அமைப்பில், அனைவரும் தன்னிச்சையாக இணைந்து பயணிக்கத் தொடங்கினர். இந்நிலையில் நாங்கள் அனைவரும் ஒன்றிணைந்து பயணிக்க தொடங்கியுள்ளோம். செிவகங்கை மாவட்டம் முழுவதும் குடை (டென்ட்)அமைத்து ‘வீ த லீடர்ஸ்’ (We the Leaders) அமைப்பிற்கு தன்னார்வலர்களாக உறுப்பினர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. இந்த உறுப்பினர் செர்க்கையை அதிகரிக்க மேலும் பல குடைகள் அமைத்து செயல்பட எண்ணியுள்ளோம் எங்கள் இலக்கான 50 லட்சம் உறுப்பினர்கள் சேரும் வரை இந்தப் பணியைத் தொடருவோம் என்றார். நாங்கள் அரசியல் பெச இங்கு வரவில்லை இயக்கத்திற்காக பணியாற்ற வந்துள்ளோம்.
சிவகங்கை மாவட்டத்திலிருந்து இத்தனை பேர் தன்னார்வலர்களாக வந்து தங்களை இணைத்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் யார் யார் என்று சொல்லிவிடுகிறேன். இவர்கள் அனைவரும் முன்னாள் நிர்வாகிகள்.

  • திரு. சிவகுமார் அவர்கள் – மாவட்ட பொருளாளர்
  • திரு. கார்த்திக் அவர்கள் – மாவட்ட துணைத் தலைவர்
  • விநாயகம் – முன்னாள் மாவட்ட அலுவலக செயலாளர்
  • திரு. செல்வ கணபதி அவர்கள் – மாநில செயலாளர் (ஓய்வு பெற்ற அரசு ஊழியர்)
  • திரு. சண்முகநாதன் அவர்கள் – மாவட்ட தலைவர் (ஓய்வு பெற்ற அரசு ஊழியர்)
  • திரு. மெய்யப்பன் அவர்கள் – மாவட்ட தலைவர் (மாவட்ட பிரச்சார பிரிவு தலைவர்)
  • திரு. துரை அவர்கள் – மாவட்ட துணைத் தலைவர் (இளைஞர் அணி)
    நிறைய கிளைத் தலைவர்கள் இந்த மாவட்டத்திலிருந்து நிறைய பேர் வந்திருக்கிறார்கள். அந்த கிளைத் தலைவர்கள் தான் ஒவ்வொரு கிளையிலும் வலுவாக (strong) இருந்து, கடந்த தேர்தல்களில் நிறைய வாக்குகள் வாங்கித் தந்திருக்கிறார்கள்.
  • திரு. சபரி
  • திரு. ராஜசேகர்
  • திரு. விக்ரமன்
  • திரு. ரவிச்சந்திரன் – இவர்கள் எல்லாம் கிளைத் தலைவர்கள்.
  • திரு. ருத்ராவதி அவர்கள் – மாவட்ட இணை அமைப்பாளர் (ஓய்வு பெற்ற அரசு ஊழியர்).
  • திரு. பெரியசாமி, ஜெ. கார்த்திக் – இவர்கள் எல்லாம் முன்னாள் சக்திகேந்திர பொறுப்பாளர்களாக இருந்தார்கள்.
  • தேவகோட்டை வடக்கு ஒன்றிய பொதுச் செயலாளர்கள் – திரு. கண்ணன், கருப்பையா வந்திருக்கிறார்கள்.
  • குருநாதன் – தேவகோட்டை வடக்கு ஒன்றிய கிளைத் தலைவர் வந்திருக்கிறார்.
  • திரு. சக்திவேல், திரு. முனியாண்டி அவர்கள் – இவர்கள் ,ஓய்வு பெற்ற எஸ்.ஐ (Retired SI).
    இதுபோல தமிழ்நாடு முழுக்க இருக்கிற நிறைய காவல்துறை சார்ந்த நண்பர்கள் வந்து, தன்னிச்சையாக தங்களை இணைத்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களும் இன்று வந்திருக்கிறார்கள்.
    இன்று 31 ஓய்வு பெற்ற காவல் ஆய்வாளர் குடும்பங்கள் தங்களை இந்த இயக்கத்தில் இணைந்துள்ளனர் எனத் தெரிவித்தார்.
  • செய்தி & படங்கள்
    சாய் தர்மராஜ்

மேகதாது அணைக்கு எதிரான முதல்வரின் தனி தீர்மானம் நிறைவேறியது..

Recent Posts