முதல்வர் விஜய் பிறந்தநாள் விழா : காரைக்குடி ஸ்ரீ சரஸ்வதி ஆரம்பப் பள்ளி மாணவர்களுக்கு நலத் திட்ட உதவி..

தமிழ்நாடு முதல்வர் விஜய் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு காரைக்குடி முத்துபட்டிணத்தில் அமைந்துள்ள ஸ்ரீ சரஸ்வதி ஆரம்பப் பள்ளியில் பயிலும் மாணவ மாணவியர்களுக்கு நோட்டு புத்தகங்களுடன் கல்வி உபகரணங்களை வழங்கினார் தவெக பிரமுகரும் தொழிலதிபருமான மருங்கிப் பட்டி இரமேஷ் .


இவ்விழாவில் கனிமளவளத்துறை அமைச்சர் பிரபுவின் தந்தை துரை கருணாநிதி, கிட் கிம் கல்லுாரி தாளாளர் அய்யப்பன், நகர செயலாளர் சொக்கு என்ற இலட்சுமணன் உடன் தவெக நிர்வாகி சுரேஷ், நேதாஜி சிவா உள்ளிட்ட தவெக பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.


விழாவிற்கு தலைமை உரையாற்றிய தலைமை அசிரியர் மீனாள் பேசும் போது. இப்பள்ளி 8 மாணவர்களுடன் இயங்கியது. பள்ளி மூடும் தருவாயில் இருந்தது. தற்பொது 34 மாணவர்களுடன் சிறப்பாக செயல்படுவதாக தெரிவித்தார்.

விழாவில் பங்கேற்ற பிரமுகர்கள் தலைமையாசிரியரின் தொண்டு அளப்பரியது என்று வாழ்த்தினர்.

செய்தி & படங்கள்
சாய் தர்மராஜ்

அண்ணாமலையின் ‘வீ த லீடர்ஸ்’ (We the Leaders) அமைப்பிற்கு ஆள் சேர்ப்பு முகாம்..

Recent Posts