
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் உலகப் பிரசித்தி பெற்றது. ஒவ்வொரு மாத பௌர்ணமி அன்றும் 14 கி.மீ கொண்ட கிரிவலப் பாதையில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்று அண்ணாமலையாரை தரிசிப்பர்.
இன்று வைகாசி மாதப் பௌர்ணமியை முன்னிட்டு லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்கின்றனர். கிரிவலப் பாதையில் அமைந்துள்ள அஷ்ட லிங்கங்களை பக்தர்கள் தரிசித்து வருகின்றனர்.
