
காரைக்குடி இரயில் நிலையத்தில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட சுமார் 10.250 கிலோ கிராம் எடையுள்ள குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
26.05.2026-ம் தேதி அன்று காரைக்குடி இருப்புப்பாதை வட்ட காவல் ஆய்வாளர் திருமதி .K ராஜலட்சுமி அவர்களின் உத்தரவுப்படி காரைக்குடி சார்பு ஆய்வாளர் திரு சுந்தரராசு மற்றும் சிறப்பு சார்பு ஆய்வாளர் திரு.செந்தில்குமார் மற்றும் HC 178, HC 450 ,692, PC 1286 ஆகியோர் சகிதம் குற்றத் தடுப்பு அலுவல் சம்பந்தமாக ரோந்து சுற்றி வந்த போது காரைக்குடி இரயில் நிலைய நடைமேடை எண் 3-ல் வந்து நின்ற T. No 22536 பனாரஸ்
to ராமேஸ்வரம் வரை செல்லும் ரயில் வண்டியில் பின்புறம் உள்ள முன்பதிவில்லாத பொது பெட்டியில் சோதனை செய்தபோது வெள்ளை நிற சாக்கு பையில் கேட்பாரற்று கிடந்த தமிழக அரசால் தடை செய்யப்பட்ட சுமார் 10.250 கிலோ கிராம் எடையுள்ள குட்கா பொருட்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது இந்த சொத்திற்கு யாரும் உரிமை கோர முன்வராத காரணத்தால் வழக்கின் சொத்தை கைப்பற்றி காரைக்குடி இருப்புப் பாதை காவல் நிலையம் கொண்டு வந்து உணவு பாதுகாப்பு அலுவலர் அவர்கள் வசம் ஒப்படைக்கப்பட உள்ளது என்பதை பணிவுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
செய்தி & படங்கள்
சாய் தர்மராஜ்
