
10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் இன்று வெளியானது. காரைக்குடி, புதுவயல் வித்யா கிரி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவ,மாணவிகள் அதிக மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளனர்.

எஸ்.சாய்பிரதிக்யா 492 மதிப்பெண்கள் பெற்று முதலிடமும் . எஸ்.லோகஸ்ரீ -488 மதிப்பெண்கள் பெற்று இரண்டாமிடமும், எஸ். ரகுமான் நிஷா -485 மதிப்பெண்கள் பெற்று மூன்றாமிடம் பெற்றதுடன் அறிவியல் பாடத்தில் 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். டி.சுவேதா–483 மதிப்பெண்கள், எஸ் சரிகாஸ்ரீ, எஸ்.விஜயமீனா இருவரும் -482 மதிப் பெண்கள் பெற்றுள்ளனர். எஸ் சுவாதிகா, எஸ்.நிரஞ்சன்,கே.மனிஷா-481 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். தேர்வெழுதிய அனைத்து மாணவர்களும் 100 சதவிகிதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர்.

வெற்றி பெற்ற மாணவர்களை பள்ளி குழுமத் தலைவர் கிருஷ்ணன், தாளாளர் முனைவர்ஆர்..சுவாமிநாதன்,பொருளாளர் ஹாஜி முகமது மீரான்,வித்யா கிரி கல்வி நிறுவனங்களின் முதன்மை நிர்வாக அதிகாரி ஐஸ்வர்யா சரண் சுந்தர், வித்யா கிரி பள்ளி முதல்வர் ஹேமாமாலினி சுவாமிநாதன், புதுவயல் பள்ளி முதல்வர் கே.குமார் மற்றும் ஆசிரியப் பெருமக்கள் மாணவர்களைப் பாரட்டினர்.
செய்தி &படங்கள்
சாய்தர்மராஜ்
