திருச்சி கிழக்கில் திரிஷாவா- சகாயமா

திருச்சி கிழக்கு இடைத்தேர்தலில் சகாயம் ஐ.ஏ.எஸ் அவர்களை த.வெ.க சார்பில் களமிறக்கக் கோரிக்கை தமிழக மக்கள் மன்றம் சார்பில் கோரிக்கை வைத்துள்ளனர்.

காரைக்குடியில் தமிழக மக்கள் மன்றம் மற்றும் தமிழ் தேசியவாதிகள் சார்பில் கலந்தாய்வுக் கூட்டமும் பத்திரிகையாளர் சந்திப்பும் நடைபெற்றது. அப்போது மக்கள் மன்றத் தலைவர் ச.மீ.இராசகுமார் பத்திரிகையாளர்களுக்கு அளித்த செய்தியில்

கடந்த ஐம்பதாண்டு காலமாக தமிழ் நிலத்தையும், தமிழ் மொழியையும், தமிழ் மண்ணையும் அழித்து தமிழ்நாட்டு இளைஞர்களை மதுவுக்கு அடிமையாக்கி சீர்குலைத்த திராவிடக் கட்சிகளிடமிருந்து தமிழகத்தை மீட்டெடுத்த த.வெ.க வினருக்கும், வாக்குக்கு பணம் என்கின்ற ஜனநாயப் படுகொலைக்கு முற்றுப்புள்ளி வைத்து நேர்வழியில் வாக்கு செலுத்தி புரட்சி செய்த மக்களுக்கும் மனமார்ந்த நன்றியினையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

அதேசமயம் கடந்த பத்தாண்டுகளுக்கு முன்பு தமிழகத்தில் மாற்றம் வேண்டி சகாயம் ஐ.ஏ.எஸ் அவர்களை அரசியலுக்கு வரவேண்டி சென்னை மதுரை போன்ற பல ஊர்களில் மாநாடு மற்றும் போராட்டங்களை நடத்தினோம். அப்போது நாங்கள் நினைத்த அரசியம் மாற்றம் தற்போது நடந்துள்ளது. அடுத்து நடக்கவிருக்கும் திருச்சி இடைத்தேர்தலில் திருச்சி கிழக்கில் திரிஷா களமிறங்குவதாக செய்திகள் தற்போது பரவி வருகின்றன. ஆனால் சகாயம் அவர்களை தவெக சார்பில் களமிறக்கி வெற்றிபெறச் செய்தால் தவெக சிறந்ததொரு நல்லாட்சி அமைக்க ஏதுவாய் இருக்கும். மேலும் தவெக ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் முதலில் செய்யவேண்டியது தமிழ்நாட்டில் உள்ள சட்டம் ஒழுங்கு சீர்கேட்டினை சரிசெய்யவும் பெண்களைப் பாதுகாக்கவும் மது ஒழிப்பு மற்றும் போதைப் பொருட்களுக்கு எதிராகவும் மலேசியா சிங்கப்பூர் போன்ற நாடுகளைப்போல் கடும் சட்டத்திருத்தத்தினை கொண்டுவர வேண்டும்.

தமிழக மக்கள் மன்றம் தலைவர் ச.மீ.இராசகுமார்.

மேலும் தமிழ்நாட்டின் கனிம வளங்கள் அழிக்கப்பட்டு இதர மாநிலங்களுக்கு அனுப்பிவைக்கப் படுகின்றன. பல்லாயிரக்கணக்கான மலைகள் அழிக்கப்பட்டு பாதாள குழிகளாகக் காட்சியளிக்கின்றன. உடனடியாக கனிம வளப் பாதுகாப்பும், தென் மாவட்டங்கள் வளர்ச்சிபெற சீமைக் கருவேல மரம் ஒழிப்பு, விவசாய வளர்ச்சிக்கு காவிரி வைகை குண்டாறு இணைப்பு, திருச்சி அல்லது மதுரையை துணைத்தலைநகரமாக அறிவிப்பது, சிறந்த நிர்வாகத்தினை செய்வதற்கு ஏதுவாக அரசுப் பணியாளர்கள் பற்றாக்குறையினை சரிசெய்து புதிய அரசுப் பணியாளர்களை நியமனம் செய்யவேண்டும் போன்ற பல்வேறு முக்கியமான கோரிக்கைகளை முன்வைத்தனர்.

இக்கூட்டத்தில் மக்கள் மன்றச் செயலாளர் வழக்கறிஞர் பிரகாசம், காந்திய மக்கள் இயக்கத்தினைச் சேர்ந்த அருளானந்தம், தமிழர் விடுதலை கட்சியினைச் சேர்ந்த தமிழ்கார்த்தி, மஞ்சுவிரட்டு பாதுகாப்பு இயக்கம் ஆறுமுகம் சேதுராமன், தமிழர் பண்பாட்டு இயக்கம் மீரான், பெண்கள் பாதுகாப்பு இயக்கம் பத்மா போன்ற பல்வேறு இயக்கத் தோழர்கள் கலந்துகொண்டனர்.

தமிழக மக்கள் மன்றம்
தலைவர்
ச.மீ.இராசகுமார்
.

திருச்சி கிழக்கு இடைத்தேர்தலில் நடிகை திரிஷா போட்டியிடப்போவதாக சென்னையில் தகவல்கள் பரவி வரும் நிலையில் திரு சகாயம் ஐஏஎஸ் களமிறக்கினால் தவெக வின் மக்கள் அதரவு மேலும் பெருகும். நடிகை திரிஷாவை போட்டியிடவைத்தால் அவர் நடித்த அரசியல் படம்தான் ஞாபகத்திற்கு வரும். திரு சகாயம் ஐஏஎஸ் போட்டியிட்டால் பெரும்பாலான மக்கள் ஏற்றுக் கொள்வார்கள். தமிழக மக்கள் மன்றக் கோரிக்கையை நிறைவேற்றுவாரா விஜய்..?

செய்தி & படங்கள்
சாய் தர்மராஜ்

தமிழ்நாட்டில் இன்று 4 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு..

திருப்பத்தூர் தேர்தல் முடிவை எதிர்த்து வழக்கு: உயதநிதி பேட்டி..

Recent Posts