வடசென்னை பகுதிகளில் கொட்டித்தீர்க்கும் கனமழை: 17.5 செ.மீ. மழை பதிவு.

வட கிழக்கு பருவ மழை தொடங்கிய நிலையில் வடசென்னை பகுதிகளில் மிகமிக கனமழை மழை பெய்து வருகிறது. சென்னை பாரிமுனையில் பெருமழை கொட்டித்தீர்க்கிறது. வாங்கிவருகிறது. சில மணி நேரங்களில் 17.5 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.
வட சென்னையை கன மழை கொடுத்த மேகங்கள், தற்போது மத்திய சென்னையை நோக்கி நகர்ந்து தேனாம்பேட்டை, கோடம்பாக்கம், நுங்கம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் மழை கொட்டித் தீர்ப்பதாக வானிலை ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.
சுமார் 4.5 கிமீ முதல் 5.8 கிமீ உயரம் வரை வட தமிழக பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு கடலோர ஆந்திர பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. சுமார் 1.5 கிமீ உயரம் வரை கர்நாடக கடலோர பகுதிகளுக்கு அப்பால் உள்ள மத்தியகிழக்கு அரபிக்கடல் பகுதிகளிலிருந்து குமரிக்கடல் பகுதிகள் வரை, ஒரு காற்றழுத்த தாழ்வு பாதை (Trough) நிலவுகிறது. சுமார் 5.8 கிமீ உயரம் வரை வட்சத்தீவின் வடக்கு பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது.

சுமார் 1.5 கிமீ முதல் 3.1 கிமீ உயரம் வரை வட்சத்தீவின் வடக்கு பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல டல சுழற்சியிலிருந்து தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகள் வரை, கேரளா மற்றும் தமிழக பகுதிகள் வழியாக ஒரு காற்றழுத்த தாழ்வு பாதை (Trough) நிலவுகிறது.

எண்டோஸ்கொபிக் தண்டுவட அறுவை சிகிச்சை: காரைக்குடி அப்பலோ மருத்துவமனை சாதனை..

சிஜேபி நிறுவனர் அபிஜித் தீப்கே நிபந்தனை ஜாமீனில் விடுவிப்பு ….

Recent Posts