
இந்திய மருத்துவக் கழகம் காரைக்குடி கே.எம்.சி கிளையின் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா மற்றும் செட்டிநாட்டுப் பகுதியில் சமூக சேவையில் சிறந்து விளங்கும் 25 ஆளுமைகளுக்கு விருது வழங்கும் விழா காரைக்குடி கிருஷ்ணா மகாலில் நடைபெற்றது.
விழாவிற்கு தமிழ்நாடு கனிமவளத்துறை அமைச்சர் டாக்டர் டி.கே.பிரபு தலைமை தாங்கினார்.மயக்கவியல் மருத்துவர் அருண் வரவேற்புரை ஆற்றினார்.சிறப்பு விருந்தினராக இந்திய மருத்துவ சங்கத்தின் தமிழ்நாடு கிளை தலைவர் டாக்டர் ஸ்ரீதர் கலந்து கொண்டு புதிய நிர்வாகிகளுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
தலைவராக தோல்,முடி,முக அழகியல் மருத்துவர் பூபதி நாகராஜன்,செயலாளராக மயக்கவியல் மருத்துவர் அருண்,பொருளாளராக பொது அறுவை சிகிச்சை நிபுணர் சதீஸ் ஆகியோர் பொறுப்பேற்றுக் கொண்டனர்.

அமைச்சர் டி.கே.பிரபு பேசுகையில்,மருத்துவரான தனக்கு அமைச்சர் பதவி வழஙகிய தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப்விஜய் மற்றும் த.வெ க பொதுச்செயலாளர் அமைச்சர் ஆனந்த் ஆகியோருக்கு நன்றி தெரிவித்ததுடன் 14 வருடங்களுக்கு முன் அயல்நாட்டில் மேற்படிப்பு முடித்து விட்டு காரைக்குடிக்கு மருத்துவ சேவை செய்ய வந்தபோது தனக்கு ஆதரவளித்த காரைக்குடி மருத்துவர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.
மேலும் புதிதாக பதவியேற்ற மருத்துவர்கள் அருண் த.வெ.க சிவகங்கை கிழக்கு மாவட்ட மருத்துவரணி அமைப்பாளராகவும்,பூபதி நாகராஜன்,சதீஸ் ஆகியோர் துணை அமைப்பாளர்களாகவும் பொறுப்பு வகிப்பதுடன் த.வெ.க ஆட்சி அமைக்கும் முன்னரே பல்வேறு சமூக பணியாற்றியதை பாராட்டி பேசினார்.வாசன் ஐ கேர் சி.இ.ஓ கமல்பாபு வாழ்த்துரை வழஙகினார்.

முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதி சொக்கலிங்கம்,முன்னாள் துணைவேந்தர்கள் சுப்பையா,ரவி,வித்யாகிரி கல்விக் குழும தலைவர் சாமிநாதன்,செல்லப்பன் வித்யா மந்திர் தாளாளர் சத்தியன்,செட்டிநாடு பப்ளிக் பள்ளி தாளாளர் குமரேசன்,மகரிஷி பள்ளி தாளாளர் சேதுராமன்,சேவுகன் அண்ணாமலை கல்லூரி தலைவர் லெட்சுமணன்,ஆனந்தா கல்லூரி செயலர் செபஸ்டியன்,உள்துறை அதிகாரி அற்புதம்,காரைக்குடி தொழில் வணிக கழக முன்னாள் தலைவர் சாமி திராவிடமணி,இந்நாள் தலைவர் கண்ணப்பன்,காரைக்குடி ரோட்டரி சங்க தலைவர் ருக்மா சரவணன்,
முன்னாள் தலைவர் லெட்சுமணன்,இயன்முறை மருத்துவர் சரவணன்,நேஷனல் கேட்டரிங் கல்லூரி தலைவர் சையது,எஸ்.பி.ஐ தலைமை பொது மேலாளர் மதன்,இமாம் முகம்மது பதுருத்தீன் யூசுப்,செஞ்சிலுவை சங்கம் சுந்தரராமன்,தொழிலதிபர்கள் பெத்தபெருமாள்,பழனியப்பன் ஆகியோரின் சமூக சேவையை பாராட்டி செட்டிநாட்டு செம்மல் விருதை அமைச்சர் டி.கே.பிரபு வழங்கினார்.
விழாவில் ஐ.எம்.ஏ முன்னாள் தலைவர்கள் டாக்டர் சுரேந்திரன்,ஜோதிகணேஷ் உள்பட மருத்துவ சங்க உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.
காரைக்குடி கே.எம்.சி மருத்துவமனை நிர்வாகிகள் டாக்டர் காமாட்சி சந்திரன்,டாக்டர் சலீம் ஆகியோர் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சிறப்பாக செய்திருந்தனர்.
செய்தி& படங்கள்
சாய்தர்மராஜ்
