
மதுரை அழகர் கோயிலின் 18ம் படி கருப்பண்ணசாமி நடை திறக்கப்பட்டது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
ஆண்டுக்கு ஒருமுறை ஆடி மாத பெளர்ணமி அன்று மட்டுமே கருப்பண்ணசாமி நடை திறக்கப்படுவது வழக்கம். கடந்த ஒருவாரமாக நடைபெற்ற ஆடித் திருவிழாவில் நேற்று தேரோட்டம் நடைபெற்றது. இன்று இரவு கருப்பண்ணசாமி நடை திறக்கப்பட்டது.
