காரைக்குடி, செட்டிநாடு பப்ளிக் பள்ளியில் சிவகங்கை மாவட்ட ரோல் பால் சாம்பியன்ஷிப் : 2026 போட்டி …

காரைக்குடி, செட்டிநாடு பப்ளிக் பள்ளி வளாகத்தில் ஜூன் 26, 2026 வெள்ளிக்கிழமை
சிவகங்கை மாவட்ட ரோல் பால் சங்கம் சார்பில் 16-வது சிவகங்கை மாவட்ட ரோல் பால் சாம்பியன்ஷிப் – 2026 மற்றும் தமிழ்நாடு மாநில ரோல் பால் போட்டிக்கான தேர்வுப் போட்டி நடைபெற்றது.

இப்போட்டியில் 9 வயதுக்குட்பட்டோர் (U-9), 11 வயதுக்குட்பட்டோர் (U-11), 14 வயதுக்குட்பட்டோர் (U-14) மற்றும் 17 வயதுக்குட்பட்டோர் (U-17) ஆகிய பிரிவுகளில் ஆண்கள் மற்றும் பெண்கள் அணிகள் பங்கேற்றன.

சிவகங்கை மாவட்டத்தின் பல்வேறு பள்ளிகள், விளையாட்டுக் கழகங்கள் மற்றும் அகாடமிகளைச் சேர்ந்த 200 க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் ஆர்வமுடன் பங்கேற்று தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். பள்ளியின் முதல்வர் திரு ராமசுப்பிரமணியன் வரவேற்புரை ஆற்றினார்.

தொடக்க விழாவில் செட்டிநாடு பப்ளிக் பள்ளி தலைவர் எஸ்.பி. குமரேசன் அவர்கள் தலைமை வகித்தார். விழாவில் சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு ரோல் பால் சங்கத்தின் பொதுச் செயலாளர் கோவிந்தராஜ் சாய் கலந்து கொண்டு சிறப்பித்தார்.

விழாவில் பேசிய திரு எஸ்.பி. குமரேசன், மாணவர்கள் ஒழுக்கம், நேரம் தவறாமை மற்றும் கட்டுப்பாட்டை கடைப்பிடிக்க வேண்டும் என்றும், போதைப்பொருள் பழக்கத்திற்கு அடிமையாகாமல் விளையாட்டு மற்றும் கல்வியில் முன்னேற வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.

திரு. குமரேசன் அவர்கள் நிகழ்வில் போது போதை ஒழிப்பு உறுதியை அனைவரும் எடுக்க வேண்டம் என வலியுறத்தினார். இதனைத் தொடர்ந்து அனைவரும் போதை ஒழிப்பு உறுதிமொழி எடுத்தனர்.

சிறப்பு விருந்தினர் திரு கோவிந்தராஜ் சாய் பேசுகையில், விளையாட்டு மாணவர்களின் உடல் நலம், தன்னம்பிக்கை மற்றும் தலைமைத்துவ திறனை மேம்படுத்துகிறது என்றும், மாநில, தேசிய மற்றும் சர்வதேச அளவில் சாதனை படைக்கும் வீரர்களுக்கு அரசின் வேலைவாய்ப்புகளில் பல்வேறு சலுகைகள் வழங்கப்படுகின்றன என்றும் தெரிவித்தார்.

இந்தப் போட்டியில் தேர்வு செய்யப்பட்ட வீரர், வீராங்கனைகள் மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளனர்.U-9 மற்றும் U-11 பிரிவு போட்டிகள் செங்கல்பட்டு மாவட்டத்தில், U-14 பிரிவு போட்டிகள் திருச்சி மாவட்டம் சாய் ஜவஹர் ரோல் பால் மைதானத்திலும் U-17 மற்றும் U-19 பிரிவு போட்டிகள் திண்டுக்கல் மாவட்டத்தில் ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் நடைபெற உள்ளன.

திருமதி சாந்தி குமரேசன், பள்ளியின் துணை சேர்மன் திரு அருண் குமார், திருமதி ப்ரீத்தி அருண்குமார் ஆகியோரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்துக்கொண்டனர்.

செய்தி & படங்கள்
சாய்தர்மராஜ்

காரைக்குடியில் உலக போதை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு தீப்பந்த பேரணி…

Recent Posts