
காரைக்குடியில் உலக போதை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு காரைக்குடி குளோபல் மிஷின் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையம், மத்திய தொழில் பாதுகாப்பு படை, தமிழக காவல்துறை ,ஊர் காவல் படை ,விவேகானந்தா நர்சிங் கல்லூரி, எஸ் எம் எஸ் வி மேல்நிலைப்பள்ளி, காரைக்குடி வெல்பர் அசோசியேஷன் இணைந்து 500க்கும் மேற்பட்டோர் போதை ஒழிப்பு தீப்பந்த பேரணியை நடத்தினர் .

இப் பேரணியை தமிழ்நாடு கனிமவளத்துறை அமைச்சர் டாக்டர் .பிரபு கொடி அசைத்து தொடங்கி வைத்தார் ,
மது ஒழிப்பு தீ பந்தத்தை செல்லப்பா வித்யா மந்திர் பள்ளியின் தாளாளர் சத்தியம் ஏற்றினார்.

தொடர்ந்து பேரணியானது ,காரைக்குடி பெரியார் சிலையில் இருந்து தொடங்கி புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள கண்ணதாசன் மணி மண்டபத்தை அடைந்தது. அங்கு போதை ஒழிப்பு உறுதிமொழியை அமைச்சர் வாசிக்க அனைவரும் சேர்ந்து உறுதிமொழியை ஏற்றனர்.
நிகழ்ச்சிக்கு தலைமை தமிழக கனிமவளத்துறை அமைச்சர் டாக்டர் பிரபு. சிறப்பு விருந்தினராக செல்லப்பா வித்யா மந்திர் பள்ளியின் தாளாளர் சத்யன் மேலும் ஏ டி எஸ் பி பிரான்சிஸ், உதவி ஆணையர் கலால், மத்திய தொழில் பாதுகாப்பு படை கமாண்டர் மனோஜ் பிரபாகர் ,காரைக்குடி தாசில்தார் ராஜா கலந்து கொண்டனர்.
விழா வரவேற்புரை நிகழ்த்தினார் இஸ்மாயில், விருந்தினர்களை கௌரவித்து நன்றியுரை காரைக்குடி குளோபல் மிஷின் மருத்துவமனை சேர்மன் டாக்டர் குமரேசன் ஆற்றினார்.

நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு காரைக்குடி குளோபல் மிசின் மருத்துவமனை
செய்தி & படங்கள்
சாய்தர்மராஜ்
