
தமிழ்நாடு மக்களின் என்றும் நிரந்தரமாக தன் கவிதை மூலம் நிறைந்திருக்கும் கவியரசு கண்ணதாசனின் 100-வது பிறந்தநாள் இன்று. கவியரசரின் பிறந்தநாளை ஒவ்வொரு ஆண்டும் அரசு விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்நிலையில் காரைக்குடி கண்ணதாசன் மணிமண்டபத்தில் அமைந்துள்ள கவியரசு கண்ணதாசனின் மார்பளவு சிலைக்கு சிவகங்கை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ப.ஆகாஷ் இ.ஆ.ப அவர்கள் அரசு சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

விழாவில் மாவட்ட ஆட்சியர் போது கண்ணதாசனின் கலை மற்றும் சினிமா அரசியல் என்பது பன்முகத் தன்மை கொண்டது. அவரின் புகழை போற்றும் வகையில் அவரின் பிறந்த நாளினை அரசு விழாவாக வருடந்தோறும் கொண்டாடி வருகிறோம்.
காரைக்குடி கண்ணதாசன் மணிமண்டபத்தில் எண்ணற்ற பல நுால்கள் உள்ளதால் மாணவ மாணவியர்களும், பொதுமக்களும் பயன் படுத்திக் கொள்வதற்கு ஏதுவாக வசதிகள் உள்ளன. பல்வேறு போட்டித் தேர்வுகளை எளிதில் எதிர்கொள்வதற்கு ஏதுவாக அவர்களுக்கு உதவியாக பல்வேறு பயிற்சி வகுப்புகளும் நடத்தப்பட்டு அதன் மூலம் இளைஞர்கள் உயர்ந்த நிலையில் வேலைவாய்ப்புகளைப் பெற்று பயனடையலாம் என்றார்.

இவ்விழாவில் திருப்பத்துார் சட்டமன்ற உறுப்பினர் திரு.ஆர். சீனிவாச சேதுபதி, திருப்பத்தார் வருவாய் கோட்டாசியர் திரு.பழனிக்குமார், காரைக்குடி மாநகராட்சி ஆணையர் திரு.கே.பாலு, கவியரசு கண்ணதாசனின் மகள் திருமதி விசாலாட்சி கண்ணதாசன், கவியரசு நற்பணி மன்ற நிறுவனர் அரு.நாகப்பன், மருத்துவர் ஆர்விஎஸ் சுரேந்திரன், மருத்துவர் செல்வகுமரன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் சு.ஜெகவீரபாண்டியன், வட்டாட்சியர் ராஜா மற்றும் அலுவலர்கள், ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
செய்தி& படங்கள்
சாய்தர்மராஜ்
