முதல்வர் விஜய் பிறந்தநாள் விழா : காரைக்குடியில் தலைக்கவச விழிப்புணர்வு பேரணி…

காரைக்குடியில் தமிழ்நாடு முதல்வர் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு தமிழக வெற்றிக் கழக சிவகங்கை மாவட்ட மருத்துவ அணி சார்பில் தலைக்கவச விழிப்புணர்வு பேரணி இன்று காலை (22-06-2026) அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தர் வளாகத்தில் நடைபெற்றது.


தலைக்கவச விழிப்புணர்வு பேரணியை தமிழ்நாடு கனிமவளம் மற்றும் சுரங்கத்துறை அமைச்சர் டாக்டர். பிரபு தொடங்கி வைத்தார்.

இவ்விழாவில் சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவப்பிரசாத் ஐபிஎஸ், காரைக்குடி உதவி காவல் கண்காணிப்பாளர் ஆஷிஷ் புனியா ஐபிஎஸ் மற்றும் தமிழக வெற்றிக் கழக சிவகங்கை கிழக்கு மாவட்ட மருத்துவ அணியினர் உள்ளிட்ட ஏராளமான கட்சியினர் கலந்து கொண்டு தலைக்கவச விழிப்புணர்வு குறித்து பேரணி நடைபெற்றது.

இவ்விழாவினை மாவட்ட மருத்துவர் அணி அமைப்பாளர் டாக்டர் அருண், மாவட்ட மருத்துவர் அணி இணைஅமைப்பாளர் டாக்டர். பாரதி ஏற்பாட்டில்

டாக்டர்.யமுனா தேவி வாசிம் அக்ரம், டாக்டர். ராஜ்குமார், டாக்டர். நாசர், டாக்டர். பூபதி நாகராஜன், டாக்டர். சதீஸ், டாக்டர். அரவிந்த் குமார், டாக்டர். ஆஷா வைரவ கணேஷ், டாக்டர். ராஜ்குமார், திரு மணிகண்டன் உள்ளிட்டோர் விழா ஏற்பாடுகளைச் சிறப்பாகச் செய்தனர்.


செய்தி &படங்கள்
சாய்தர்மராஜ்

டெல்லியில் ஜூன் 22-ல் BRICS நாடுகளின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் கூட்டம்…

பெரியபாளையம் அருகே தொழிற்சாலையில் அம்மோனியா வாயு கசிவால் 7 பேர் உயிரிழப்பு..

Recent Posts