
கேரளாவில் அதி வேகமாக பரவும் ஷிகெல்லா பாக்டீரியா தொற்று மேலும் 19 பேருக்கு பரவியுள்ளது கண்டறியப்பட்டுள்ளதால் தொற்றால் பாதிப்படைந்தோர் எண்ணிக்கை 110 ஆக உயர்ந்துள்ளது. தற்போது வரை ஷிகெல்லா பாக்டீரியா தொற்று gாதிப்பால் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.
சுகாதாரமற்ற மாசடைந்த குடிநீர் மற்றும் உணவு காரணமாக பரவும் இத் தொற்றால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.இந்நிலையில் கொச்சி அரகே உள்ள திருபுனித்துறை அரசு ஆயுர்வேதக் கல்லுாரி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
