குடிமைப் பணி சிவில் சர்வீசஸ் தேர்வில் EWS பிரிவில் மோசடி..

இந்தியாவின் உயர் பதவிகளான ஐஏஎஸ்,ஐபிஎஸ் போன்ற குடிமைப் பணி சிவில் சர்வீசஸ் தேர்வில் EWS(பொருளாதார ரீதியாக நலிந்த பிரிவு) பிரிவில் மிகப் பெரிய மோசடி நடைபெற்றுஉள்ளது தற்போது அம்பலமாகியுள்ளது.
2025ல் நடந்த சிவில் சர்வீசஸ் தேர்வில் EWS பிரிவில் 104 உயர்ஜாதி ஏழை மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். சிவில் சர்வீசஸ் தேர்வில் வென்ற உயர்ஜாதி ஏழைப்பிரிவு மாணவர்களின் பின்னணி குறித்து அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.

சிவில் சர்வீசஸ் தேர்வில் வென்ற 104 உயர்ஜாதி ஏழைகளில் 67 பேர் சிறந்த பயிற்சி மையங்களில் படித்துள்ளனர். 67 பேரும் ஆண்டுக்கு ரூ. 2.65 லட்சம் வரை கட்டணம் வசூலிக்கும் புகழ்பெற்ற மையங்களில் படித்துள்ளனர். ஆண்டுக்கு ரூ.8 லட்சத்துக்கு குறைவாக வருமானம் உள்ளவர்களே EWS பிரிவில் சலுகைகள் பெறத் தகுதியாவர்கள்.

ஆனால், பிரபலமான சிவில் சர்வீஸ் தேர்வு மையங்களில் படித்தவர்கள், பன்னாட்டு நிறுவனங்களிள் வேலை செய்வோர், தனியார் பள்ளி நடத்துவோர், வணிகத்தில் கோடிக்கணக்கில் வருவாய் ஈட்டுவோர் என்று பலரின் வாரிசுகள் இந்த EWS இட ஒதுக்கீட்டை பயன்படுத்தி சிவில் சர்வீஸ் தேர்வில் இடம் பிடித்துள்ளனர் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

கேரளாவில் மேலும் 19 பேருக்கு ஷிகெல்லா பாக்டீரியா தொற்று பாதிப்பு…

மேகதாது அணைக்கு எதிரான முதல்வரின் தனி தீர்மானம் நிறைவேறியது..

Recent Posts