
தமிழக வெற்றிக்கழகத்தின் சார்பில் காரைக்குடி சட்டப் பேரவை தொகுதியில் வென்று கனிமவள மற்றும் சுரங்கத்துறை அமைச்சராக பொறுப்பேற்றுள்ள டாக்டர்.டி.கே. பிரபு குன்றக்குடி ஆதினத்திற்கு வருகை புரிந்து தவத்திரு பொன்னம்பல அடிகளாரைச் சந்தித்து ஆசி பெற்றார்.

மேலும் அவர் மறைந்த குன்றக்குடி அடிகளாரின் மணிமண்டத்தில் உள்ள அடிகளாரின் சிலைக்கு மாலை அணிவித்து வணங்கினார்.

முன்னதாக குன்றக்குடி சண்முகநாத கோயிலுக்கு சென்று வழிப்பட்டார். கோயில் நிர்வாகம் சார்பில் அமைச்சருக்கு மரியாதை வழங்கப்பட்டது.

அமைச்சர் டி.கே. பிரபு -விற்கு தவத்திரு பொன்னம்பல அடிகளார் பிறந்த நாள் வாழ்த்துக் கூறி ஆசி வழங்கினார். அமைச்சருடன், கிட் கிம் கல்லுாரி தாளாளர் ஐயப்பன், மருங்கிப்பட்டி இரமேஷ் உடனிருந்தனர்.
செய்தி & படங்கள்
சாய்தர்மராஜ்
