
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், புதிய ஓய்வூதியம் உட்பட முக்கிய திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
தலைமைச் செயலகத்தில் நேற்று காலை 11.15 மணிக்கு முதல்வர் ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இதில், அமைச்சர்கள், தலைமைச் செயலர், நிதி, சுற்றுலா, பண்பாடு, தொழில் துறை செயலர்கள் பங்கேற்றனர். இக்கூட்டத்தில், தமிழக அரசின் சார்பில், ‘உங்கள் கனவை சொல்லுங்க’ என்ற புதிய திட்டத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
அத்துடன், அரசு அறிவித்த ‘புதிய தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியம்’ திட்டத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. மேலும், ஜன.20-ம் தேதி சட்டப்பேரவை யில் ஆளுநர் வாசிக்க வேண்டிய உரை, பட்ஜெட்டில் இடம் பெற வேண்டிய திட்டங்கள் தொடர்பாகவும் விவாதிக்கப்பட்டது. அத்துடன், தமிழக அரசின் சார்பில் சிப்காட் தொழிற்பேட்டை, 4 புதிய தொழில் திட்டங்களுக்கான ஒப்புதல், சலுகைகள் தொடர்பான அனுமதிகள் வழங்கப்பட்டுள்ளது.
