
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசின் 11 -ஆம் ஆண்டு சாதனைகளை காரைக்குடியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சிவகங்கை மாவட்ட பாஜக தலைவர் பாண்டித்துரை தலைமையில் புதுக்கோட்டை மாவட்ட பாஜக மாநில குழு உறுப்பினர் புரட்சிகவிதாசன் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார்.
பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு தலைமையேற்றது முதல் பல்வேறு வகையில் நாட்டை வல்லராசாக்கியுள்ளது. அனைவருக்கும் வங்கி கணக்கு, எளிய மக்களுக்கு விலையில்லா சமையல் எரிவாயு, கடை கோடி மக்களுக்கும் பிரதமர் வீட்டு வசதி திட்டத்தின் மூலம் வீடு, குழாய் வழியே குடிநீர் திட்டம், அனைவருக்கும் கழிப்பறை வசதி, கிராமங்கள் இணைப்பு சாலை என மக்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் செயது வருகிறார் நமது பாரத பிரதமர்

ராமர் கோயில், காஷ்மீரில் இருந்து வந்த 370-வது சட்டப் பிரிவை நீக்கியது. இராணுவத்தில் நவீன கட்டமைப்பை உருவாக்கியது. உலக அரங்கில் இந்தியாவை வலிமை மிக்க நாடாக மாற்றியது என பாஜகவின் 11-ஆண்டுகால சாதனைகளை விக்கி கூறினார்.
இந்நிகழ்வில் சிவகங்கை மாவட்ட பாஜக பொறுப்பாளர்கள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
செய்தி & படங்கள்
சிங்தேவ்