“தீர்ந்துபோன சக்தி என்று சொன்ன கட்சிகளின் எம்.எல்.ஏ.க்களையே திருடுகிறார் முதல்வர்” :திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சனம்…

“பாஜகவின் ஜெராக்ஸ் காப்பியாக முதல்வர் செயல்படுகிறார் என திமுக தலைவர் ம.க.ஸ்டாலின் விமர்சனம் செய்துள்ளார். தன் ஆட்சி மீதும், தனக்கு ஆதரவளித்துள்ள கட்சிகள் மீதும் நம்பிக்கையில்லாமல் அடுத்த கட்சி சட்டமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்கி பாஜகவின் ஜெராக்ஸ் காப்பியாக முதல்வர்செயல்படுகிறார்.

தவெக ஆட்சியின் தோல்விகளை தொடர்ந்து சுட்டிக்காட்டுவோம் என அண்ணா அறிவாலயத்தில் திமுக மகளிரணி ஆலோசனைக் கூட்டத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார்.

அடுத்து எப்போது தேர்தல் வந்தாலும் மக்களே இந்த ஆட்சியை அகற்றுவார்கள். தவெக ஆட்சியில் குற்றச்சம்பவங்கள் பெருகிவிட்டன. தவெகவுக்கு ஏன் வாக்களித்தோம் என்று மக்கள் வருந்துகின்றனர். திமுக பெற்ற வாக்குகளுக்கு மகளிரணியும் முக்கிய காரணம். திமுக ஆளுங்கட்சியாக மாற வேண்டும் என்றால் இன்னும் சுறுசுறுப்பாக வேகமாக செயல்பட வேண்டும். ஆளுங்கட்சியைச் சேர்ந்த பெண்ணுக்கே பாலியல் கொடுமை நடந்துள்ளது.

விஜய் ஆட்சி மீது விஜய்க்கே நம்பிக்கை இல்லையா? அதிமுக எம்எல்ஏக்களை ஷாப்பிங் செய்கிறார் முதலமைச்சர் விஜய். தவெகவினரிடம் இருந்து பாதுகாப்பு வேண்டும் என்று மக்கள் கேட்கும் நிலை வந்துவிட்டது. பெண்களுக்கு எதிரான பெரும்பாலான குற்றங்களில் தவெகவினர் தான் ஈடுபடுவதாக செய்திகள் வருகின்றன. பாஜக மற்ற மாநிலங்களில் செய்வதை இங்கு விஜய் செய்கிறார். ஒரே மாதத்தில் கேலிக்கூத்தான, அசிங்கமான ஆட்சியாக தவெக ஆட்சி மாறியுள்ளது. கான்பிடன்டாக இருங்க என்ற விஜயே நம்பிக்கையுடன் இல்லை. தீர்ந்துபோன சக்தி என்று சொன்ன கட்சிகளின் எம்.எல்.ஏ.க்களையே திருடுகிறார் முதல்வர்.

“தலைமுறைகளின் சங்கமம்” :காரைக்குடி கலைக்கோவில் நாட்டியப் பள்ளியின் உலக சாதனை நிகழ்வு..

விண்வெளியில் குவிக்கப்படும் ஸ்டார்லிங் சாட்டிலைட்கள்..

Recent Posts