
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் வேளாண் கல்லுாரி மாணவர்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் இணைந்து வேளாண் விவசாயக் கண்காட்சி வெகு விமர்சையாக நடைபெற்றது.
இந்த வேளாண் விவசாயக் கண்காட்சியை “சேது பாஸ்கரா வேளாண்மைக் கல்லுாரி மற்றும் அறிவியல் ஆராய்ச்சி மாணவிகள்” ஸ்ரீநிதி, நாகமீனா, மகாலெட்சுமி, அமிர்த ஸ்ரீ, பூஜா ஸ்ரீ, கௌரி ஊரக வேளாண்மைப் பணி அனுபவத் திட்டப் பயிற்சியின் ஒரு பகுதியாக பள்ளி மாணவர்களுடன் இணைந்து வழிநடத்தினர்.
வேளாண் விவசாயக் கண்காட்சியில் வேளாண் கல்லுாரி மாணவிகள் தாங்கள் கற்றதை விவசாயிகளுக்குப் பயன்படும் வகையில் கண்காட்சியில் வெளிபடுத்திருந்தனர். நீர் சேமிப்பு,மண்வளம்,மண் பரிசோதனை,விதைப்பந்து (Seed ball / Nendo Dango) ,விதை நேர்த்தி, விதைப்பண்ணை அமைப்பது, உயிர் உரம் தயாரித்தல்,பயோ என்சைம் (Bio Enzyme) ,“மண் பானைப் பொறி“ , மஞ்சள் அட்டை பொறி, தென்னை வளர்ச்சி,மைக்ரா கிரின்ஸ் (தானிய முளைக்கட்டிய பயிர்),வேளாண் உற்பத்திப் பொருட்களை “மதிப்பு கூட்டல்” என பலவற்றை விரிவாக காட்சிக்கு வைத்தனர்..
இது போல் மாணவர்களும் கண்காட்சியில் பங்கேற்றனர். அவர்களில் சிறப்பாக செயல்பட்ட மாணவர்களுக்கு பரிசு வழங்கினர் வேளாண் மாணவிகள்.
விவசாயிகளுக்குப் பயன்படும் வகையில் “தென்னை தோழன்” என்ற செயலியைத் தொடங்கி வைத்தனர்.
