
சென்னையில் இன்று காலை முதல் பரவலாக மிதமான மழை பெய்து வருகிறது.சென்னை, டெல்டா உள்ளிட்ட 9 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள“ளது.
தென்மேற்கு வங்கக் கடலிலிருந்து மத்திய மேற்கு வங்கக் கடல் வழியாக வடக்கு கடலோர ஆந்திரப் பிரதேசம் வரை சுமார் 1.5 கி.மீ. உயரம் வரை ஒரு காற்றழுத்த தாழ்வுப் பாதை நிலவுகிறது.
இதன் காரணமாக தமிழகத்தில் இன்று, சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்.
