தமிழக முதல்வரின் ‘அண்ணன் சீர்’ திட்டம்: பயன்பெற என்னென்ன தகுதிகள் ? ..

தமிழக முதல்வரின் 8 கிராம் தங்க நாணயம், ஒரு பட்டுப் புடவை வழங்கும் ‘அண்ணன் சீர்’ திட்டத்துக்கு விண்ணப்பிப்பதற்கான வழிகாட்டுதல்களை சமூக நலத் துறை வெளியிட்டுள்ளது.
வருமான வரி, தொழில் வரி செலுத்தும் குடும்பங்கள், சொந்தப் பயன்பாட்டுக்கு கார் வைத்திருப்பவர்கள், 5 ஏக்கருக்கு மேல் நன்செய் அல்லது 10 ஏக்கருக்கு மேல் புன்செய் நிலம் வைத்திருப்பவர்கள் இதில் பயன்பெற முடியாது. மேலும், பிற துறைகள் அல்லது வாரியங்களின் திருமண நிதியுதவித் திட்டங்களில் ஏற்கெனவே பயன்பெற்றவர்களுக்கும் இத்திட்டத்தில் உதவி வழங்கப்படாது.

இதுதவிர ஆண்டுக்கு 3,600 யூனிட்டுக்கு மேல் மின்சாரம் பயன்படுத்தும் குடும்பங்கள், தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் (ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் தவிர), அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் ஆண்டுக்கு ரூ.50 லட்சத்துக்கு மேல் விற்பனை செய்து ஜிஎஸ்டி செலுத்தும் நிறுவனங்களின் குடும்பத்தினரும் பலன்பெற முடியாது.

இந்த திட்டத்துக்கு இணையதளம் வாயிலாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். திருமணத்துக்கு 60 நாட்களுக்கு முன்பிருந்து திருமண நாள் வரை விண்ணப்பிக்கலாம்.
அதேபோல் 2026 அக்டோபர் 5 முதல் 2027 ஜனவரி 15-ம் தேதி வரையான திருமணங்களுக்கு ஜனவரி 15-ம் தேதி வரை விண்ணப்பிக்க கால அவகாசம் தரப்பட்டுள்ளது. இசேவை மையங்கள் www.tnesevai.tn.gov.in இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். ஆதார் எண், குடும்ப அட்டை அடிப்படையில் தகுதி சரிபார்க்கப்படும். தகுதியானவர்கள் திருமண அழைப்பிதழைப் பதிவுசெய்ய வேண்டும். விண்ணப்பம் ஏற்கப்பட்டால் தனித்துவ அடையாள எண் வழங்கப்பட்டு, குறுஞ்செய்தி, மின்னஞ்சல் மூலம் தகவல் தெரிவிக்கப்படும்.

தகுதி பெற்றவர்கள் திருமணம் முடிந்த 15 நாட்களுக்குள் தமிழகத்தில் திருமணத்தைப் பதிவுசெய்ய வேண்டும். விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டால் அதற்கான காரணம் தெரிவிக்கப்படும். நிராகரிப்பு தவறானது என கருதுபவர்கள் இணையதளம் மூலம் மேல்முறையீடு செய்யலாம். அவ்வாறு பெறப்படும் மேல்முறையீடுகள் குறித்து கள விசாரணை நடத்தி, தகுதியுடையவர்களுக்கு உதவி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இது குறித்து சமூக நலத்துறை செயலர் பல்லவி பல்தேவ் வெளியிட்ட அரசாணை விவரம்: தமிழகத்தில் ஆண்டு வருமானம் ரூ.2.5 லட்சத்துக்குள் உள்ள குடும்பங்களை சேர்ந்த தகுதியான பெண்களுக்கு திருமணத்தின்போது 8 கிராம் தங்க நாணயம், ஒரு பட்டுப்புடவை வழங்கும் ‘அண்ணன் சீர்’ திட்டத்தை தமிழக அரசு அமல்படுத்தியுள்ளது. நடப்பாண்டில இத்திட்டத்தை செயல்படுத்த ரூ.812 கோடி நிதியும் ஒதுக்கப்பட்டுள்ளது. தற்போது இதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி இத்திட்டத்தின்கீழ் பயன்பெற மணமக்கள் சட்டப்படி திருமணத்துக்கான குறைந்தபட்ச வயதை பூர்த்தி செய்திருக்க வேண்டும். மணப்பெண்ணின் பெயர் செயல்பாட்டில் உள்ள குடும்ப அட்டையில் இடம்பெற்றிருக்க வேண்டும். குடும்பத்தின் ஆண்டு வருமானம் ரூ.2.5 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இருந்து ஓய்வு :மகேந்திர சிங் தோனி அறிவிப்பு..

Recent Posts