சிஜேபி நிறுவனர் அபிஜித் தீப்கே நிபந்தனை ஜாமீனில் விடுவிப்பு ….

சிஜேபி நிறுவனர் அபிஜித் தீப்கே நிபந்தனை ஜாமீனில் விடுவிக்க டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. மூவர்ணக் கொடி போராட்டத்தில் ஈடுபட முயன்றதால் கைது செய்யப்பட்ட கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் நிறுவனர் அபிஜித் தீப்கேவுக்கு டெல்லி நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியதை அடுத்து அவர் விடுவிக்கப்பட்டார். ஓராண்டுக்கு அமைதியாக இருப்பதாக உறுதி கூறும் பத்திரத்தில் தீப்கே கையெழுத்திட்டதை அடுத்து அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.

கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் (சிஜேபி) செய்தித் தொடர்பாளர் சவுரவ் தாஸ், ஒருங்கிணைப்பாளர் அசுதோஷ் ரங்கா ஆகியோர் கடந்த 13-ம் தேதி தேசிய கொடியுடன் ஜந்தர் மந்தரில் தடையை மீறி நுழைந்தனர். இருவரையும் போலீஸார் கைது செய்தனர்.

அவர்களை விடுதலை செய்ய வேண்டும், தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி சிஜேபி சார்பில் நேற்று (அக்.16) மாலை 5 மணிக்கு டெல்லி கனாட்பிளேஸ் மத்திய பூங்காவில் மூவர்ண கொடி ஏற்றப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதற்கு டெல்லி போலீஸார் அனுமதி வழங்கவில்லை.
இந்நிலையில், டெல்லி ஜாண்டேவாலன் பகுதியில் தேசியவாத காங்கிரஸ் (சரத் பவார்) செய்தித் தொடர்பாளர் அனிஷ் கவாண்டே வீட்டில் சிஜேபி நிறுவனர் அபிஜித் திப்கே தங்கியிருந்தார். அந்த வீட்டுக்கு நேற்று மதியம் டெல்லி காவல் துறை மூத்த அதிகாரிகள் சென்றனர். போலீஸ் அனுமதியில்லாமல் சட்டவிரோதமாக போராட்டம் நடத்தக்கூடாது என்று காவல் துறை சார்பில் அஜிபித் திப்கேவிடம் நோட்டீஸ் வழங்கப்பட்டது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக டெல்லி கனாட்பிளேஸ் மத்திய பூங்கா பகுதியில் 28,000-க்கும் மேற்பட்ட போலீஸார் குவிக்கப்பட்டனர்.

மாலை 5 மணி அளவில் டெல்லி ஜாண்டே வாலன் பகுதி வீட்டில் இருந்து அபிஜித் திப்கே புறப்பட்டார். அவரை போலீஸார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். மேலும், பிஎன்எஸ்எஸ் பிரிவு 163, பிரிவு 126, 170 ஆகிய பிரிவுகளின் கீழ் போலீசார் அவர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

வடசென்னை பகுதிகளில் கொட்டித்தீர்க்கும் கனமழை: 17.5 செ.மீ. மழை பதிவு.

கொல்கத்தா துர்கா பூஜையில் நெரிசலில் சிக்கி 17 பேர் உயிரிழப்பு 39 பேர் படுகாயம்..

Recent Posts