காரைக்குடி சிக்ரி(CECRI) யில் 2 நாட்கள் நடைபெற்ற பார்வையாளர்கள் தினம் : ஏராளமானர் பங்கேற்பு..

சி.எஸ்.ஐ.ஆர்(CSIR) இன் 85-வது நிறுவன நாளை முன்னிட்டு இதன் கீழ் இயங்கும் 38 ஆராய்ச்சி நிறுவனங்களில் அரிய கண்டுபிடிப்புகள் நாட்டு மக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டது.
காரைக்குடியில் அமைந்துள்ள மத்திய மின் வேதியில் ஆராய்ச்சி நிறுவனத்தில்(CECRI) செப்.26 மற்றும் 27 தேதிகளில் அரிய கண்டுபிடிப்புகள் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டன.


இவ்விழாவை முன்னிட்டு செப்டம்பர் 26-ஆம் தேதி காலை 10 மணிக்கு பார்வையார்கள் அரங்கை சிக்ரியின் இயக்குனர் ரமேஷா தொடங்கி வைத்தார். இதில் சர்வதேசதரத்தில் சிக்ரியின் கண்டுபிடிப்புகளை ஆய்வுப்படுத்தி பொதுமக்களுக்கு விளக்கினர். செயல்முறை வடிவமாகவும் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் அமைக்கப்பட்டிருந்தது.

எதிர்கால எரிசக்தியை பூர்த்தி செய்யும் வகையில் மாற்று எரிசக்தியான நன்நீர் மற்றும் கடல் நீரிலிருந்து உற்பத்தி செய்யப்படும் பசுமை எரிசக்தியான ஹைட்ரஜன் குறித்து விளக்கப்பட்டது.

மேலும் உப்பு நீரில் மின்சாரம் தயாரிப்பது.அதிக நேரம் சார்ஜ் நிற்கும் ஜிங்க் அலுமினியம் ஏர் பேட்டரீஸ், 3டி பிரிண்டிங், மண் பரிசோதனை கருவிகள், நவீன் மூலப் பொருட்களைக் கண்டறியும் கருவிகள், நோய்களைக் துல்லியமாகக் கண்டறியும் பயோ சென்சார்கள், முகக் கவசம் மூலம் நுரையீரல் தன்மையைக் பரிசோதிக்கும் மைக்ரோசிப் தொழில்நுட்பம், மழை நீரைச் சேமிக்கும் தரைதளக் கான்கிரீட், உலோக அரிமான தடுப்பு பூச்சுகள், நானோ மின் வேதியியல் கண்டுபிடிப்புகளின் மாதிரிகள் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தன.

இத்தகைய அருமையான வாய்ப்பை காரைக்குடி அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து பள்ளி,கல்லுாரி மாணவ,மாணவிகள், இளைஞர்கள், பொதுமக்கள் என ஆயிரக்கணக்கானோர் இரண்டு நாட்களிலும் பார்வையிட்டனர். அறிவியல் அரங்கிற்கு தமிழ்நாடு அரசு போக்குவரத்துதுறை சார்பில் சிறப்பு பேருந்துகள் பொதுமக்கள் வசதிக்காக இயக்கப்பட்டன. விழா ஏற்பாடுகளை சிக்ரி குழுவினர் சிறப்பாக அமைத்திருந்தனர்.

செய்தி & படங்கள்
சாய்தர்மராஜ்

காரைக்குடி மத்திய மின் வேதியியல் ஆராய்ச்சி நிறுவனம் (CECRI)யில் செப்.26 பார்வையாளர்கள் தினம்..

‘தாய்மாமன் தங்க மோதிரம்’திட்டம்: மதுரையில் தொடங்கி வைத்தார் முதல்வர் விஜய்..

Recent Posts