
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி மானகிரியில் அமைந்துள்ள செட்டிநாடு பப்ளிக் பள்ளி மாணவர்கள், Global Design Challenge (GDC) 2026 நிகழ்வின் ஒரு பகுதியாக ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் உள்ள Swinburne University யின் ஒரு அங்கமான KIOSC(Knox Innovation Opportunity and Sustainability Centre) – கிற்கு 16.08.2026 முதல் 23.08.2026 வரை கல்விப் பயணம் மேற்கொண்டனர்.

இப்பயணம் மாணவர்களுக்கு சர்வதேசக் கல்வி, STEM கற்றல், தொழில்நுட்பம், புதுமை மற்றும் கலாச்சாரப் பரிமாற்றம் குறித்த சிறந்த அனுபவத்தை வழங்கியது குறிப்பிடத்தக்கது.
மாணவர்கள் Knox Innovation Opportunity and Sustainability Centre (KIOSC)-இல் வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்று, அதன் பல்வேறு பிரிவுகளைப் பார்வையிட்டனர். மேலும், Melbourne Girls College (MGC) மாணவர்களுடன் இணைந்து கணிதம், அறிவியல், தொழில்நுட்பம் உள்ளிட்ட வகுப்புகளில் பங்கேற்றனர்.

Melbourne Girls College-இல் மேற்கொண்ட பள்ளிச் சுற்றுப்பயணத்தின் மூலம் வகுப்பறைகள், இசை அறை, நடன அறை, அரங்கம், உள்விளையாட்டு மைதானம், படகோட்டப் பயிற்சி, கலை அறை, தொழில் வழிகாட்டுதல் மையம் மற்றும் மாணவர் நல மையம் உள்ளிட்ட பல்வேறு வசதிகளை மாணவர்கள் பார்வையிட்டனர். மேலும், MGC மாணவர்களுடன் கலந்துரையாடி, ஆஸ்திரேலியக் கல்வி முறையைப் பற்றியும் அறிந்துகொண்டனர்.

கல்விப் பயணத்தின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றாக Gippsland பகுதியில் நடைபெற்ற Hydrogen Car Race போட்டியை மாணவர்கள் நேரில் கண்டுகளித்தனர்.

ஆஸ்திரேலியாவிலிருந்து 21 அணிகளும், இந்தியாவிலிருந்து ஒரு அணியும் பங்கேற்ற இப்போட்டி நான்கு மணி நேரம் நடைபெற்றது. இதில் இந்திய அணி சிறப்பாகச் செயல்பட்டு Best Pit Crew Award என்ற தொழில்நுட்பக் குழுவிற்கான விருதைப் பெற்றது.

மேலும், மாணவர்கள் Victorian Education Department அதிகாரிகள் மற்றும் இந்தியாவின் துணைத் தூதரக அதிகாரி திரு. அனிஷ் ராஜன் ஆகியோரைச் சந்திக்கும் வாய்ப்பையும் பெற்றனர்.

STEM கற்றலின் ஒரு பகுதியாக ட்ரோன்கள், LEGO பொறியியல் கருவிகள், கணித அடிப்படையிலான சூழ்நிலைத் தீர்வுகள் மற்றும் வெப்பநிலைப் பதிவேற்றம் உள்ளிட்ட செயல்பாடுகளில் மாணவர்கள் ஈடுபட்டனர். இதன் மூலம் அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதத்தை நடைமுறை அனுபவத்தின் வாயிலாகக் கற்றுக்கொண்டனர்.

மாணவர்கள் Virtual Universe மூலம் சூரியக் குடும்பம் குறித்த மெய்நிகர் கற்றல் அமர்விலும் பங்கேற்றனர். மேலும், Factory of the Future-ஐப் பார்வையிட்டு, மனித உருவ ரோபோ உள்ளிட்ட நவீன ரோபோக்களின் செயல்பாடுகளை அறிந்துகொண்டனர். பல்வேறு தொழில்துறைகளில் பயன்படுத்தப்படும் தொழில்துறை ரோபோக்களையும் நேரில் பார்வையிட்டனர்.

இதனுடன், Koala Sanctuary, Churchill Island, Phillip Island மற்றும் Melbourne Museum ஆகிய இடங்களையும் மாணவர்கள் பார்வையிட்டனர். இதன் மூலம் ஆஸ்திரேலியாவின் வனவிலங்கு, சுற்றுச்சூழல், வரலாறு மற்றும் கலாச்சாரம் குறித்தும் அறிந்துகொண்டனர்.

செட்டிநாடு பப்ளிக் பள்ளி மாணவர்களின் இந்த ஆஸ்திரேலியக் கல்விப் பயணம், கல்வி, STEM தொழில்நுட்பம், புதுமை, கலாச்சாரப் பரிமாற்றம் மற்றும் நடைமுறை அனுபவம் ஆகியவற்றை ஒருங்கிணைக்கும் சிறப்பான கற்றல் அனுபவமாக அமைந்துள்ளது.
செய்தி & படங்கள்
சாய்தர்மராஜ்
