
ஊத்துக்கோட்டை வட்டம் பெரியபாளையம் அருகே தனியார் மீன் உணவு ஏற்றுமதி தொழிற்சாலையில் ஏற்பட்ட அம்மோனியா வாயு கசிவினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7 ஆக அதிகரித்துள்ளது.
திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டை வட்டம், பெரியபாளையம் அருகே கன்னிகைபேர் கிராமத்தில் இன்று (21.06.2026) தனியார் மீன் உணவு ஏற்றுமதி தொழிற்சாலையின் உற்பத்தி பிரிவில் எதிர்பாராதவிதமாக அம்மோனியா வாயு கசிவு ஏற்பட்டது. இதில், அங்கு பணியில் இருந்த 64 பேர் பாதிக்கப்பட்டனர். இவ்விபத்தில் 7 பேர் உயிரிழந்த நிலையில், 50க்கும் மேற்பட்டோர் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதேநேரத்தில், இரண்டு பெண்கள் உயிரிழந்ததாக அரசு தரப்பில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த விபத்து குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள முதல்வர் விஜய், “இச்சம்பவத்தில் இரண்டு பெண்கள் உயிரிழந்தது குறித்த துயர செய்தியை கேட்டு மிகவும் அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன். இவ்விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதோடு முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து தலா இரண்டு இலட்சம் ரூபாய் வழங்க உத்தரவிட்டுள்ளேன்.
