
காரைக்குடி சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட டாக்டர் டி.கே. பிரபு தமிழ்நாடு அரசின் கனிமவள மற்றும் சுரங்கத்துறை அமைச்சராக பொறுப்பேற்றார்.
இந்நிலையில் அவரின் பிறந்த நாளை முன்னிட்டு காரைக்குடி முத்துமாரியம்மன் கோயிலில் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டு 6000 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

மாலை முத்து மாரியம்மன் கோயிலில் அமைச்சர் டி.கே.பிரபு மற்றும் அவரின் குடும்பத்தார்கள் சாமி தரிசனம் செய்தனர் . அமைச்சர் டி.கே. பிரபுவிற்கு பூரண கும்ப மரியாதை செய்யப்பட்டது.

இரவு வெள்ளத் தேரில் அம்மன் உலா நடைபெற்றது. இந்நிகழ்வில் அமைச்சரின் தந்தை இருமதி கருணாநிதி, கிட்கிம் கல்லுாரி தாளாளர் ஐயப்பன், மருங்கிப்பட்டி இரமேஷ் மற்றும் தவெக நிர்வாகிகள் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

முன்னதாக காரைக்குடி சட்டமன்ற அலுவலகத்தில் அமைச்சருக்கு பெண்கள் மலர்துாவி பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தனர். தவெக நிர்வாகிகள் தொண்டர்கள் அமைச்சருக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறினர்.பொதுமக்களுக்கு பல நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

செய்தி & படங்கள்
சாய்தர்மராஜ்
